• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இது உண்மையில் என் பெற்றோரைப் பற்றி… எனது டெல்லி நாட்களைப் பற்றி.. ஞாபகத்தைத் தூண்டியது, காலப்போக்கில் உருவான புதிய நண்பர்கள் காலத்தில் இழந்த நண்பர்கள் என பல நினைவுகளை கிளறிவிட்டுவிட்டது என, டங்கி படத்தின் சமீபத்திய பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் பற்றி SRK பகிர்ந்திருக்கிறார்

by Tamil2daynews
December 2, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இது உண்மையில் என் பெற்றோரைப் பற்றி… எனது டெல்லி நாட்களைப் பற்றி.. ஞாபகத்தைத் தூண்டியது, காலப்போக்கில் உருவான புதிய நண்பர்கள் காலத்தில் இழந்த நண்பர்கள் என பல நினைவுகளை கிளறிவிட்டுவிட்டது  என, டங்கி படத்தின் சமீபத்திய பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் பற்றி SRK பகிர்ந்திருக்கிறார்

 

டங்கி டிராப் 3  நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் நேற்று வெளியிடப்பட்டது, இந்த பாடல் இந்தியா முழுதும் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.  பாடல் மீதான ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடு சமீபத்திய #AskSrk அமர்வின்போது கண்கூடாக வெளிப்பட்டது.

சிறந்த எதிர்காலத்தையும்  வாய்ப்புகளையும் தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணத்தையும், அன்புக்குரியவர்களை விட்டுச் சென்ற கணத்தையும் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டும் வகையில்,  இந்த பாடல் பார்வையாளர்களுடன் ஒரு  இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரும் உணர்வைத் தூண்டும் வகையில், இந்த பாடல் உண்மையில் தங்கள் வீட்டைத் தவறவிட்டு, அதை விட்டு விலகி இருப்பவர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும்  ஒரு கீதமாக வந்துள்ளது.

இந்த பாடலின் பெரும் சிறப்பு என்னவெனில்,  ஜாவேத் அக்தர், ராஜி ஹிரானி, சோனு நிகம், ப்ரீதம் மற்றும் ஷாருக்கான் போன்ற  அனைத்து பிரபலங்களின் கூட்டு விருந்தாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

நடிகர் ஷாருக்கான் சோனு நிகம், ப்ரீதம் மற்றும் ஜாவேத் அக்தர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து #AskSrk அமர்வைத் தொடங்கினார். அந்த பதிவில் அவர் எழுதியிருப்பதாவது,

“#Dunki படத்தின் யின் ஆன்மாவை வெளிப்படுத்தும் வரையறுக்கும் Nikle The….பாடலுக்கு #சோனு @ipritamofficial @Javedakhtarjadu ஆகியோருக்கு. நான் இப்போது கொஞ்சம் விலகி இருக்கேன், உங்களுடன் #AskSRK வில் இணைகிறேன் வாருங்கள் வேகமாக ஆரம்பிப்போம்….”

https://twitter.com/iamsrk/status/1730828856557457679?t=6zpTyFRct9KPCIDf6D9USg&s=19

இது  வெறும் ஆரம்பம் தான், SRK ரசிகர்கள் பாடல்கள் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் போது #AskSrk அமர்வை அன்பு வெள்ளத்தில் மூழ்கடித்தனர். அவர்கள் எவ்வாறு தங்களின் அன்பை வெளிப்படுத்தினார்கள் என்பது இங்கே, –

சோனு நிகாம் குறித்து

ஒரு ரசிகர் கேட்கையில், “சார்  பாடல் பிடித்திருந்தது. சோனு நிகாமுடன்  மீண்டும் இணைந்து பணியாற்றுவது எப்படி இருந்தது ?” என்றார்.

இதற்கு , SRk பதிலளிக்கையில், “சோனுவின் குரல் தங்கம் போன்றது.. #Dunki” என்றார்.

ஷாருக்கின் பலவீனம்

ஒரு ரசிகர் கேட்டபோது, “இந்தப் பாடலின் மூலம் எங்களை மிகவும் உணர்ச்சிவசப் படுத்தியுள்ளீர்கள். உங்களின் எமோஷனல் பலவீனம் என்ன? #AskSRK” என்றார்.

அதற்கு பதிலளித்த ஷாருக், “என் குடும்பம் என நினைக்கிறேன்….அது எல்லோருக்கும் தான் அல்லவா. #Dunki” என்றார்.

பார்வையாளர்களுக்கு அவர்களின் வீட்டை பற்றி நினைவூட்டல்

ஒரு ரசிகர் கேட்கையில், “சார் இந்தப் பாடலை நீங்கள் முதலில் கேட்டபோது உங்களுக்கும் என்னைப் போல் வீட்டு ஞாபகம் வந்ததா? #AskSRK @iamsrk #Dunki #DunkiDrop3 #NikleThekhiHumGharSe” என்றார்.

அதற்கு பதிலளித்த ஷாருக், ஆம் இது உண்மையில் என் பெற்றோரைப் பற்றி… எனது டெல்லி நாட்களைப் பற்றி.. ஞாபகத்தைத் தூண்டியது, காலப்போக்கில் உருவான புதிய நண்பர்கள் காலத்தில் இழந்த நண்பர்கள் என பல நினைவுகளை கிளறிவிட்டுவிட்டது. மிகவும் உணர்வுப்பூர்வமாகி விட்டேன் #Dunki.

 பாடலுடன்  இணைக்கும் அன்பு குறித்து SRK

ஒரு ரசிகர் கேட்கையில், “#asksrk இந்த நிலையிலும் எப்படி மிக எளிமையானவராக இருக்கிறீர்கள்”

பாடலினால்  பெரிதும் ஈர்க்கபட்ட SRK பாடலிலிருந்தே இதற்கு பதிலளித்தார், “இசா தர்தி பே ஜன்மெய்ன் ஹைன் இஸ் தர்தி பே மர்னா ஹை….எப்போதும் கால்களை தரையில் ஊன்றிக் கொண்டே இருப்பது நல்லது… கடினமாக உழைக்க வேண்டும். ”

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு  ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பரில் வெளியாகிறது.
Previous Post

சுசி கணேசனின் “தில் ஹை கிரே’ கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) “ ரெட் கார்பெட்”அந்தஸ்த்தோடு “ பிரத்யேக ப்ரீமியர் “ -ல் திரையிடப்பட்டு , பாராட்டுகளை அள்ளிக்குவித்தது.

Next Post

‘ஃபைட் கிளப்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

'ஃபைட் கிளப்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Popular News

  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.