• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராக்கிங் ஸ்டார் யாஷ், கீது மோகன்தாஸ் மற்றும் வெங்கட் நாராயணா ஆகியோர் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷ்19 படத்தின் தலைப்பாக டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரவுன் அப்ஸ் ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) அறிவிக்கப்பட்டுள்ளது!!

by Tamil2daynews
December 9, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ராக்கிங் ஸ்டார் யாஷ், கீது மோகன்தாஸ் மற்றும் வெங்கட் நாராயணா ஆகியோர் கூட்டணியில்  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷ்19 படத்தின் தலைப்பாக டாக்சிக் –  எ ஃபேரி டேல் ஃபார் க்ரவுன் அப்ஸ் ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) அறிவிக்கப்பட்டுள்ளது!!

 

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “டாக்சிக் –  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) தலைப்பிடப்பட்டுள்ளது !!

ஒன்றரை வருடங்களாக அமைதி காத்த ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார்.  டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் என்று அறிவித்துள்ளார். இந்திய சினிமாவில் மிகவும் என எதிர்பார்க்கப்படும் இப்படம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் நாடு முழுக்க ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ராக்கிங் ஸ்டார் யாஷ் கூட்டணியில் உருவாகிறது.

தாங்கள் செய்ய விரும்பிய படத்தை ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக உருவாக்கும் முனைப்பில் பொறுமை மற்றும் ஆர்வத்துடன், இருவரும் படத்தை வடிவமைப்பதிலும் ஒரு நட்சத்திரக் குழுவை அமைப்பதிலும் தங்கள் முழுமையான நேரத்தை எடுத்துக் கொண்டனர். பல ஊகங்களுக்குப் பிறகு, படக்குழு படத்தின் தலைப்பை ஒரு காட்சி துணுக்குடன் பகிர்ந்து கொண்டது, அவர்களின் திட்டமிடல் மற்றும் படைப்பின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
Yash 19 Title Revealed: KGF Actor's Movie Is Now Called 'Toxic' | Watch Announcement Video“டாக்சிக் –  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை )  என்ற தலைப்பை வெளிப்படுத்தும் வீடியோ, பார்வையாளர்களை தீவிரமான ஒரு படைப்புலகத்திற்குள் அழைத்துச் செல்லும் என்பதை உறுதியளிப்பதுடன், வெளியீட்டுத் தேதியையும் அறிவித்து, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

https://youtu.be/6bg5tM2jmUU?si=u_Al2aalVhT6lp1F

இப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் K நாராயணா கூறுகையில்..,
“எங்களின் மிகப்பெருமையான படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். யாஷ் மற்றும் கீது இருவரும்  ரசிகர்களை மகிழ்விக்கும் ஆக்சனுடன் ஒரு மிகச்சிறந்த படைப்பாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததால்,  இப்படத்தை அறிவிக்க சிறிது காலதாமதாமானது.  நாங்கள் தயாரிக்கும் இந்த அற்புதமான மற்றும் பிரம்மாண்டமான படத்தை உலகத்திற்கு காட்டுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

படத்தைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட கீது மோகன்தாஸ், ”எனது கதை சொல்லல் பாணியில் நான் எப்போதும் பரிசோதனை முயற்சிகளை தொடர்ந்து  செய்து வருகிறேன். எனது முந்தைய படங்களான லையர்ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் ஆகியவை சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், எனது நாட்டில் எனது சொந்த பார்வையாளர்களை திருப்திபடுத்தி வெற்றிப்படம் தர  ஆசைப்பட்டேன். அந்த எண்ணத்தில் உருவானதுதான் இந்த திரைப்படம். இந்த படம் இரண்டு எதிர் உலகங்களின் கதையை அழகியல் கலந்து சொல்லும் ஒரு கலவையான படைப்பாக இருக்கும், இந்தப்படத்திற்காக யாஷுடன் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்  நான் சந்தித்த மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் யாஷ், அவருடன் இணைந்து இந்த மாயாஜால பயணத்தை எங்கள் குழு தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  “டாக்சிக் –  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”  படத்தை கீது மோகன்தாஸ் எழுதி இயக்குகிறார், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Previous Post

தன் குடியிருப்பைச் சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!!

Next Post

ஹாலிவுட் விருதுகளில் இடம் பிடித்த அட்லியின் ஜவான்

Next Post

ஹாலிவுட் விருதுகளில் இடம் பிடித்த அட்லியின் ஜவான்

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் – யோகி பாபு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.