• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இளையராஜாவின் இசையில் ஸ்ரீகாந்த்- சிந்தியா நடிக்கும் ” தி ன ச ரி ” புது இயக்குனர் அறிமுகம் |

by Tamil2daynews
December 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இளையராஜாவின் இசையில் ஸ்ரீகாந்த்- சிந்தியா நடிக்கும் ” தி  ன  ச  ரி ” புது இயக்குனர் அறிமுகம் 

ஸ்ரீகாந்த்- சிந்தியா லெளர் டே ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் ” தினசரி “. மேலும் இதில் எம்.எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா, இன்னும் பலர் நடிக்கின்றனர்.

இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கும் இதற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவையும், ஜான் பிரிட்டோ கலையையும், சாம் சண்டை பயிற்சியையும், தினேஷ் நடன பயிற்சியையும் , பாலமுருகன்– சண்முகம் இருவரும் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல் படமாக இயக்கி வரும் சங்கர் பாரதி படத்தை பற்றி கூறியதாவது, ” மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது.? குறிப்பாக இளைஞர்கள்  பணம் இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை நகைச்சுவையுடன் ஆக்சனையும் கலந்து விறு விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன். நாயகனாக நடிக்கும் ஸ்ரீகாந்த் ஜோடியாக அமெரிக்காவில் வாழும் சிந்தியா லெளர் டேவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளேன். பிரேம்ஜி, எம்.எஸ். பாஸ்கர் , மீரா கிருஷ்ணன், வினோதினி, முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்கள்.

இளையராஜா இசையில் முதல் பட இயக்குனர்களின் படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வரும் சென்டிமெண்டில் இப்பொழுது நானும் இணைகிறேன். எனக்கு இது தான் முதல் படம்- இளையராஜா என்ற மாபெரும் சாதனையாளர் என்படத்திற்கு இசையமைப்பது நான் செய்த பாக்கியம்.” என்று கூறினார்.
500 படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி உள்ளவரும், ஆறு நேரடி தமிழ் திரைப்படங்களை தயாரித்தவருமான என். விஜயமுரளி தமது மகா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ” தினசரி ” திரைப்படத்தை தயாரிக்கிறார்.
 படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள “தினசரி ” படத்தில் இரண்டு பாடல்களுக்கு மாபெரும் அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர். விரைவில் திரைக்கு வர உள்ளது ” தினசரி ” திரைப்படம்.
Previous Post

பூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் சினிமாவின் சரித்திரத்தை விரிவுபடுத்துகிறார்கள். கபீர் சிங்கிலிருந்து பிரபாஸின் ‘ஸ்பிரிட்’, ‘அனிமல் பார்க்’ மற்றும் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் புதிய படம் என அற்புதமான வரிசையுடன் ஒரு வளமான கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Next Post

ஹிருத்திக் ரோஷனின் அடுத்த சரவெடி! வெளியானது பைட்டர் படத்தில் இருந்து புரமோஷனல் பாடல்!

Next Post

ஹிருத்திக் ரோஷனின் அடுத்த சரவெடி! வெளியானது பைட்டர் படத்தில் இருந்து புரமோஷனல் பாடல்!

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • புது வீடு வாங்க விமல் படும் கஷ்டங்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.