ஹிருத்திக் ரோஷனின் அடுத்த சரவெடி! வெளியானது பைட்டர் படத்தில் இருந்து புரமோஷனல் பாடல்!

இந்நிலையில், தற்போது ஃபைட்டரின் புரமோஷன் பாடலான ‘இஷ்க் ஜெய்சா குச்’ (Ishq Jaisa Kuch) பாடலில் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷனின் அசாதரான நடன அசைவுகளை மீண்டும் வழங்கி உள்ளார். கடந்த வாரம் வெளியான ஃபைட்டர் படத்தின் முதல் பாடலான ‘ஷேர் குல் கயே’ (Sher Khul Gaye) பாடலில் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் தனது அசாத்திய நடன அசைவுகளால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். ஃபைட்டரின் சமீபத்திய புரமோசனல் பாடலான ‘இஷ்க் ஜெய்சா குச்’ (Ishq Jaisa Kuch) மூலம் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது அசாத்திய நடன திறமையை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளர். இந்த பாடல் ஹிருத்திக் ரோஷனின் மற்றொரு மறக்கமுடியாத ஹூக்ஸ்டெப்பையும், ரசிகர்களுக்கு மற்றொரு ஹிட் பாடலையும் வழங்கி உள்ளது.

ஹிருத்திக் ரோஷனின் ஏக் பால் கா ஜீனா, மெயின் ஐசா கியூன் ஹூன், தூம் அகெய்ன், பேங் பேங், குங்ரூ மற்றும் ஷேர் குல் கயே போன்ற புகழ்பெற்ற நடனப் பாடல்களில் ‘இஷ்க் ஜெய்சா குச்’ (Ishq Jaisa Kuch) ஹூக்ஸ்டெப் இணைந்துள்ளது. ‘இஷ்க் ஜெய்சா குச்’ பாடலில் ஹிருத்திக் ரோஷன் தீபிகா படுகோனேவுடன் நடனமாடி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒன்கவுட் ஆகி உள்ளது.