• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் வெற்றி பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடிய ஆலன் படக்குழு !!

by Tamil2daynews
December 22, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் வெற்றி பிறந்தநாளை,  கேக் வெட்டி கொண்டாடிய ஆலன் படக்குழு !!

 

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் வெற்றி. வித்தியாசமான படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும், நடிகர் வெற்றியின் பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் “ஆலன்” திரைப்படக்குழுவினர்.

திரையுலகில் அறிமுகமான எட்டு தோட்டாக்கள், ஜீவி  என முதல் இரண்டு படங்களிலேயே, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வெற்றி.  வித்தியாசமான களங்களில்  ரசனை மிகு படங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படங்களிலும் தன்னை மெருகேற்றிக்கொள்வதோடு, ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறார் வெற்றி.

தற்போது 3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க,  மனதை மயக்கும்  ரொமான்ஸ் டிராமாவான  ஆலன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை சர்ப்ரைஸாக, மொத்தப்படக்குழுவினரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி அவரை மகிழ்வித்துள்ளனர்.

ஆலன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன்,   அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா  நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.

வாழ்வின் எதிராபார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம்,  காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா R.

நடிகர் வெற்றி நாயகனாக நடிக்கும்  இப்படத்தில் ஜெர்மனியைச் சேர்ந்தா மதுரா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் கொடைக்கானல், ராமேஸ்வரம் முதலாலன பல இடங்களிலும், காசி, ரிஷிகேஷ் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. முதல்கட்டப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Previous Post

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய இயக்குநர் அமீர்

Next Post

ரசிகர்களின் பாராட்டில், குடும்பங்கள் நண்பர்களோடு கொண்டாடும் அழகான சினிமா – “டங்கி” வார இறுதியில் 40% – 50% கூடுதலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது!!

Next Post

ரசிகர்களின் பாராட்டில், குடும்பங்கள் நண்பர்களோடு கொண்டாடும் அழகான சினிமா - “டங்கி” வார இறுதியில் 40% - 50% கூடுதலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது!!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.