• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘வட்டார வழக்கு’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

by Tamil2daynews
December 27, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘வட்டார வழக்கு’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

 

மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடிப்பில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் ‘வட்டார வழக்கு’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் பேசியதாவது,
“‘மாமன்னன்’ படத்தில் அமைந்தது போல ஒரு கதாபாத்திரம் தான் ரவீனாவுக்கு இந்தப் படத்தில். மிக நேர்த்தியாக நடித்துள்ளார். கமர்ஷியல் படங்கள் என்பதை விட உண்மைக்கு நெருக்கமான படங்கள் விநியோகிப்பதில் தான் எனக்கு ஆத்மார்த்த திருப்தி. உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்” என்றார்.

நடிகை ரவீனா ரவி, “2019-ல் நடித்தப் படம் இது. ராமச்சந்திரன் சார் நினைத்தது போல படம் வந்திருக்கிறது என நம்புகிறேன். நல்ல கதை இது. வருகிற 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மீடியா நல்ல விமர்சனம் கொடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படப்பிடிப்பு நடத்திய ஊரில் உள்ள கிராமத்து மக்களும் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தனர். எல்லோரும் ரிஸ்க் எடுத்து தான் நடித்திருக்கிறோம். திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன், ” இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போகும்போது எல்லாம் எங்களை உற்சாகம் குறையாமல் படக்குழுவினர் பார்த்துக் கொண்டனர். இவர்கள் எண்பது சதவீதம் பேர் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்துள்ளனர். சிறு சிறு விஷயங்களுக்கு கூட எங்களை எதிர்பார்க்காமல் அவர்களது சொந்த காசை செலவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். கேபிள் சங்கர் சார், சித்ரா லட்சுமணன் சார் எனப் பலரும் எங்களுக்கு வழிகாட்டி, பொருளாதார உதவி வரை செய்தனர். பின்னணி இசையை நம்பி இருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு ராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். படத்தைப் பார்த்துவிட்டு அவர் சம்மதம் சொன்னார்.

ஒரு சின்ன படத்திற்கான அடிப்படைத் தேவைக்கான செலவு மட்டும் தான் ராஜா சார் கேட்டிருந்தார். ஆனால், அவர் கேட்டதில் 60% தான் என்னால் கொடுக்க முடிந்தது. 40% பணம் என்னிடம் இல்லை. அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாது இசையை செய்து தருவதாக சொன்னார். அவர் காலில் விழுந்து விட்டேன். 12 நாட்கள் ஒரு தியானம் போல, இதன் பின்னணி இசையை செய்து கொடுத்தார். நல்ல படம் என்பதால், இதற்குப் பலரும் எந்தவிதமான எதிர்பார்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தனர். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் சார் எப்பொழுதும் நல்ல படம்தான் எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். பத்திரிக்கையாளர்களின் உதவியோடு அவரை அணுகினேன். அவருக்கும் படம் பிடித்து சம்மதம் சொன்னார். சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவிமர் அனைவருக்கும் நன்றி. பொருளாதாரத்தில் சில குறை நிறைகளோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதை மன்னித்து உங்கள் ஆதரவைக் கொடுங்கள். 29 ஆம் தேதி ‘வட்டார வழக்கு’ வெளியாகிறது இந்த படத்திற்கு இரண்டு எஜமானர்கள். ஒன்று பார்வையாளர்கள், இன்னொன்று ஊடகங்கள். நீங்கள் தரும் ஆதரவினால் தான் ‘வட்டார் வழக்கு’ மைலேஜ் ஏற்றி அடுத்தடுத்து நகரும்” என்றார்.

நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், “இந்தப் படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை இஷ்டப்பட்டு தான் வேலை செய்து இருக்கிறோம். இசைஞானி அவர் பெயரை சொல்வதற்கு கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது. அவரது இசையில் நடித்துள்ளது எனக்குப் பெருமையாக உள்ளது. இயக்குநர், ரவீனா எனப் படக்குழுவினர் அனைவருமே அவரவர் சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர். இப்போது எல்லாம் சின்ன படங்களை வெளியிடுவது கஷ்டம், தியேட்டர் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். நீங்கள் ஒரு தரமான படத்தை எடுத்தால் அதை வெளியிடுவதற்கு சக்திவேல் சார் தயாராக இருக்கிறார். நீங்கள் உழைப்பையும், படத்தையும் நேர்மையாக கொடுத்தால் உங்களுக்கான அங்கீகாரமும் அடையாளமும் விருதுகளும் தானாக வந்து சேரும் என்பது நிச்சயம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

Previous Post

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ 2024, பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகிறது!

Next Post

ஷாருக்கானின் ‘டங்கி’ படத்தின் கட்அவுட்டுகளுடன் அவரின் வீட்டிற்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்து, ஷாருக்கான் உற்சாகமாக கையசைத்ததை.. ரசிகர்கள் கொண்டாடினர்..!

Next Post

ஷாருக்கானின் 'டங்கி' படத்தின் கட்அவுட்டுகளுடன் அவரின் வீட்டிற்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்து, ஷாருக்கான் உற்சாகமாக கையசைத்ததை.. ரசிகர்கள் கொண்டாடினர்..!

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.