இரண்டு முதலமைச்சர்களின் உண்மைக் கதை..!
காசுக்காக எதையும் செய்பவர் என்று பேர் எடுத்த டைரக்டர் ராம் கோபால் வர்மா..
இவர் லேட்டஸ்டா ஆந்திர சி எம் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை மையமா வச்சு எடுத்த படம் வியூகம். இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் அஜ்மல் நடிச்சிருக்கார்.
இந்த படத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோரின் கேரக்டர்களும்ளும் இருக்குது.

மேலும் ரீசண்டா இப் படத்தின் போஸ்டர் வெளியாச்சு அதில் கூட இருவரையும் இழிவுப்படுத்தும் வகையில் இருந்ததால்,தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வியூகம் படத்தின் போஸ்டரை தீ வைச்சு எரிச்சாய்ங்க. அதுமட்டுமில்லாமல், பிலிம் நகரில் உள்ள ராம்கோபால் வர்மாவின் அலுவலகத்தில் நுழைந்து பொருட்கட்களை சேதப்படுத்தினாய்ங்க.
இச்சூழலில் இந்த வியூகம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சந்திரபா பு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் தெலுங்கானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 11ந் தேதி வரை வியூகம் படத்தை திரையிட தடை விதிச்சு உத்தரவிட்டிருக்குது.









