• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

by Tamil2daynews
January 22, 2024
in சினிமா செய்திகள்
0
அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

 

Life Cycle Creations சார்பில்  தயாரிப்பாளர் பவன் K மற்றும் அஜிஸ் P ஆகியோர் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சமூக அக்கறைமிக்க சோஷியல் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள படம் “அரிமாபட்டி சக்திவேல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை முன்னணி இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு இணைந்து வெளியிட்டுள்ளனர்.

இந்தத் திரைப்படம் திருச்சி அருகே ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமமே தங்களுக்கு என்று ஒரு கட்டுபாட்டை வரையறுத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஊரில் உள்ள ஒருவன் அந்த கட்டுப்பாட்டை மீறும்போது நாயகனுக்கும்  ஊருக்கும்,  நடக்கும் வாழ்வியல் போராட்டங்களை  மையக்கருவாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
இயக்குநர் கரு பழனியப்பன் உதவியாளராக பணியாற்றிய,  ரமேஷ் கந்தசாமி இப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமாகிறார். சமூகத்தின் மறுபக்கத்தை ஏற்றத்தாழ்வுகள் மிக்க மனிதனின் முகத்தை தோலுரித்து காட்டும் படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.      இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சார்லி நடித்துள்ளார். நாயகனாக புது முகம் பவன் .K நடிக்க, நாயகியாக மலையாள நடிகை மேகனா எலேன் நடித்துள்ளார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, Super good சுப்ரமணி, கராத்தே வெங்கடேஷ், Hello கந்தசாமி, பிர்லா போஸ், அழகு, செந்தி குமாரி உட்பட மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருகிறார்கள்.
அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய,  அம்பேத்கரும், பெரியாரும் இன்னும் மாறாத சமூகத்தை பரிதாபத்துடன் கவனிக்கும் குறியீடாக,  சிறைக்கம்பிகளுக்கு வெளியில் நின்று, கிராமத்தின் பஞ்சாயத்தை கவனித்து பார்க்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படம்  சொல்ல வரும், கருத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திவிடுகிறது. மாறுபட்ட வகையில் அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு அரியலூர் மற்றும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

தொழில் நுட்பக் குழு

இயக்கம்      – ரமேஷ் கந்தசாமி
கதை & திரைக்கதை, வசனம் – பவன் .K
தயாரிப்பு    –  அஜிஷ் P. & பவன் K
இசை  –   மணி அமுதவன் (களவானி -2 )
ஒளிப்பதிவு   – JP மேன்
படத்தொகுப்பு –  RS. சதிஸ் குமார்
கலை இயக்குனர் – கபாலி கதிர்.K
ஆடை வடிவமைப்பு  – பழனி அம்மாவாசை
நடனம் – மது
சண்டைப்பயிற்சி – பில்லா ஜெகன்
பாடல்கள்   –  மணி அமுதவன்
நிர்வாக தயாரிப்பு  – விக்கி

Previous Post

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பதை முன்னிட்டு நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்து பாடியுள்ள பாடல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’

Next Post

தென்னிந்தியாவின் கோல்டன் ஃபேஸ் 2024 (Golden Face of South India Pageant 2024): ஈர்ப்பு, மகிழ்ச்சி, வலிமை நிரம்பிய இரவு!

Next Post
தென்னிந்தியாவின் கோல்டன் ஃபேஸ் 2024 (Golden Face of South India Pageant 2024): ஈர்ப்பு, மகிழ்ச்சி, வலிமை நிரம்பிய இரவு!

தென்னிந்தியாவின் கோல்டன் ஃபேஸ் 2024 (Golden Face of South India Pageant 2024): ஈர்ப்பு, மகிழ்ச்சி, வலிமை நிரம்பிய இரவு!

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.