விஜய் பட இயக்குநர் இயக்கிய லோக்கல் சரக்கு பட விமர்சனம்..!
சுறா, அழகர் மலை போன்ற படங்களை இயக்கிய எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் உருவான படம் தான் லோக்கல் சரக்கு. இப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் நடித்திருக்கிறார். யோகி பாபு, உபாசனா, இமான் அண்ணாச்சி சிங்கம்புலி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியானது. ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை இந்த படம் எடுத்துரைக்கிறது. அதாவது குடும்பத் தலைவன் பொறுப்பில்லாமல் குடிகாரனாக சுற்றித் திரிவதால் குடும்பத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை இந்த படம் அழுத்தமாக கூறியிருக்கும்.
கதைச்சுருக்கம்சென்னையில் தனது தங்கையுடன் கதாநாயகன் வசித்து வருகிறார். வேலைக்கு எதுவும் செல்லாமல் உதாரியாக தங்கை சம்பாதிக்கும் பணத்தை குடித்து அழிக்கிறார். இது தவிர நண்பர்கள் தெரிந்தவர்கள் என அனைவரிடம் வித்தியாச வித்தியாசமான பொய்களை கூறி கடன் வாங்கி குடிக்கிறார். இதனை பொறுத்துக் கொள்ளாமல் அந்த வீட்டில் இருந்து தங்கை வெளியேற நினைக்கிறார். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதுதான் லோக்கல் சரக்கு படத்தின் கதை!
பிரபலமான நடன கலைஞராக தினேஷ் இருந்திருந்தாலும் இந்த படத்தில் ஒரு குடிகாரனாக தனது முழு நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகனுடன் யோகி பாபு இருக்கும் நகைச்சுவை காட்சிகள் பலரும் விரும்பக் கூடியதாக அமையப் பெற்றிருக்கிறது. இந்த கதை எதார்த்த வாழ்வில் ஒன்றி போனாலும், கதையைக் காட்சிப்படுத்துவதில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.








