• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘வடக்குப்பட்டி ராமசாமி’ – விமர்சனம்

by Tamil2daynews
February 3, 2024
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘வடக்குப்பட்டி ராமசாமி’ – விமர்சனம்

 

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி சந்தானம் நடிப்பில் வெளிவந்த டிக்கிலோனா படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்திருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி.

சந்தானம் கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்ததில் இருந்து காமெடி ட்ராக்கில் மிகவும் உறுதியாக இருக்கின்றார் என்பதற்கு வடக்குப்பட்டி ராமசாமி மற்றொரு உதாரணம். படத்தின் ட்ரைலெர் வெளியானபோது ஏற்பட்ட விவாதம் படத்தின் மீதான கவனத்தை கொஞ்சம் ஈர்த்திருந்தாலும், ட்ரெய்லரால் ஏற்பட்ட விவாதத்திற்கும் இந்தப் படத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகின்றது. படம் முழுக்க காமெடி காட்சிகளாலும் காமெடி வசனங்களாலும் ரசிகர்களை சிரிக்க வைக்க படக்குழு எடுத்த முயற்சிகள் பல இடத்தில் வெற்றி கண்டுள்ளது. Vadakkupatti Ramasamy Movie HD Images | Santhanam

ஒரு ஊரில் இருக்கும் சிறுவனுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை.  தற்செயலாக நடந்த சம்பவத்தால் அவன் செய்த பானையை அந்த ஊரில் உள்ளவர்கள் கடவுளாக வழிபட ஆரம்பித்துவிட்டனர். இதனை தனக்கு வருமானம் பார்க்கும் ஒரு வியாபாரமாக மாற்றி வாழ்ந்து வருபவர் சந்தானம். இவருடன் இணைந்து ஊரை ஏமாற்றிவருபவர்களாக மாறனும், லொல்லு சபா சேஷூவும் நடித்துள்ளனர். இவர்களுக்கு அந்த ஊருக்கு  வட்டாச்சியராக வரும் தமிழ் தொந்தரவு கொடுக்க, கோயில் பூட்டப்படுகின்றது.  இதனால் ஏற்பட்டது என்னென்ன? இறுதியில் என்ன ஆச்சு? என்பது படத்தின் மிதிக் கதை. இதில் சந்தானம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து வெளியேற “மெட்ராஸ் ஐ” நோயை பயன்படுத்துவது, மக்களை அதிலிருந்து காக்க நினைக்கும் மருத்துவராக வருபவருக்கு ஒத்துழைக்காத ஊர் மக்களின் மனநிலை, படம் நடப்பதாக சொல்லப்படும் 1974ஆம் ஆண்டு காலகட்டத்தினை காட்டுகின்றது.

சந்தானம், மாறன், லொல்லு சபா சேஷூ இவர்கள் படத்தில் வரும் காட்சிகள் காமெடி சரவெடியாக இருக்கின்றது. அதே ஊரில் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ள ரவி மரியா மற்றும் ஜான் விஜய் இடையே நடக்கும் சண்டைகள் தியேட்டரில் கைதட்டல்களைப் பெறுவது மட்டும் இல்லாமல் ரசிக்க வைக்கின்றது. இந்தக் காமெடி ட்ராக்குகள் ஒருபுறம் ஓடிக்கொண்டு இருக்க, நிழல்கள் ரவியின் காமெடி ரசிகர்களுக்கு ட்ரீட். ஒரு கட்டத்திற்கு மேல் நிழல்கள் ரவி திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
Vadakkupatti Ramasamy Movie HD Images | Santhanamஹீரோயினாக நடித்துள்ள மேஹா ஆகாஷ் அழகாக இருந்தாலும் அவருக்கு மிகவும் முக்கியமான கதாப்பாத்திரம் இல்லை. படத்தின் இசை காமெடி தன்மைக்கு ஏற்றமாதிரி சிறப்பாக அமைத்துள்ளார் ஷான் ரோல்டன். இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும், நிழல்கள் ரவியின் காட்சிகள் சலிப்பை போக்குகின்றன. இறுதியாக வரும் மொட்டை ராஜேந்திரன் ஸ்கோர் செய்கின்றார். கூல் சுரேஷ் கதாப்பாத்திரம் நகைச்சுவையில் கவனம் ஈர்க்கின்றது.

தமிழ் சினிமாவில் காமெடி டிராக்கை மையப்படுத்திய கதைகளிலும் சரி, ஜனரஞ்சகமான படங்களிலும் சரி ஆங்காங்கே வரும் இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுழிக்க வைக்கின்றது. இந்தப் படத்திலும் இரட்டை அர்த்த வசனக் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அந்தக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.

முதல் பாதையில் சந்தானத்தின் ஆதிக்கம் இருந்தாலும் நிழல்கள் ரவியை வைத்து இவர்கள் அமைத்திருக்கும் காமெடி காட்சிகள் கலகல லொள்ளு சபா மாறன் சேசு இவர்களின் கூட்டணி படம் பார்ப்பவரை சிரிக்க வைக்கும்.

மொத்தத்தில் படம் வடக்குப்பட்டி மட்டும் அல்ல பட்டி தொட்டி எங்கும் வெற்றிவாகை சூடும்.
Previous Post

‘சிக்லெட்ஸ்’ – விமர்சனம்

Next Post

‘டேவில்’ – விமர்சனம்

Next Post

'டேவில்' - விமர்சனம்

Popular News

  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி – Mookuthi Amman 2: Mahasakthi’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.