• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

by Tamil2daynews
February 23, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

 

‘உறியடி’, ‘ஃபைட் கிளப்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எலக்சன்’. இதில் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘அயோத்தி’ படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை ரிச்சா ஜோஷி, நடிகர்கள் ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத, மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாள, கலை இயக்கத்தை ஏழுமலை மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தித் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான விஜய்குமாரின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றிருக்கிறது.

விரைவில் இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக் , லிரிக்கல் வீடியோ, ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
Previous Post

டிஸ்னி+ ஹாஸ்டார் வழங்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் புதிய திரைப்பத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்க யோகிபாபு நடிக்கிறார்!!

Next Post

எஸ்.எழில் டைரக்டர் செய்யும் “தேசிங்கு ராஜா2”

Next Post

எஸ்.எழில் டைரக்டர் செய்யும் “தேசிங்கு ராஜா2”

Popular News

  • மனதை வருடும் இசை ஆல்பம் –  என் மனமே.

    மனதை வருடும் இசை ஆல்பம் – என் மனமே.

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.