• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

by Tamil2daynews
April 5, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷி இறுதியாக ப்ரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட தருணத்தில் ஒரு நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது. பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை கரை புரண்டோடச் செய்து, அவர்களின் உற்சாகத்தை வெளியிடச்செய்யும்  வகையில், பிரைம் வீடியோ, மனதை ஒன்றிப்போகச்செய்யும் இந்தத் தொடர்  நிகழ்ச்சியின் விளம்பர போஸ்டர்களை சென்னை முழுவதும் நிறுவியது. ஒரு வலைப் பின்னலில் இருந்து ‘வனராட்சி’ AKA ‘ராட்சி’ என்ற ஒரு கொடிய  புராணகால வன மோகினி மற்றும் பழங்குடியினருக்கான வன தெய்வம், வெளிவரும் இதயத்தைத் பிழியும் காட்சிகளை இந்த விளம்பரக் காட்சிகள் எடுத்துக் எடுத்துக்காட்டுகின்றன. விளம்பரப் பலகைகளின் ஓரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் சிலந்தி வலை  தமிழ்நாட்டின் தென்காடு என்ற சிறிய கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக செயல்படுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட இந்த விளம்பர போர்டுகள் பார்வையாளர்கள் மத்தியில்  இந்த திகில்-கிரைம்-டிராமா தொடரை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன.  சமீபத்தில் இந்தத் தொடரின் குழுவினர், இந்த ஹோர்டிங்குகளை வெளியிடுவதோடு, நிகழ்ச்சியின் வெற்றியை பார்வையாளர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நோக்கத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கும் சென்றிருந்தார்கள்.

நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசிய தொடரின் கதாநாயகனான நடிகர் நவீன் சந்திரா, கூறினார்  “இன்ஸ்பெக்டர் ரிஷி தொடருக்கு பார்வையாளர்கள் அளித்த அற்புதமான விமர்சனங்களுக்காக அவர்களுக்கு நன்றி சொல்ல இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.. அனைவரின் பாராட்டும் ஆதரவும் எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டதோடு இந்த நிகழ்ச்சி தொடர்பாக எங்கள் மீது அனைவராலும் காட்டப்படும்   அன்பும் ஆதரவும் என்னை மிகவும் பணிவாக உணரச்செய்து மகிழ்ச்சியளித்தது. உலகம் முழுவதிலுமிருந்தும் பார்வையாளர் களிடமிருந்து வரும் இத்தகைய பாராட்டுகள் மேலும் சிறப்பாக செயல் படுவதற்கான மன எழுச்சியை என்னுள் தூண்டி, மனதைக் கொள்ளை கொள்ளும்  மற்றும் மகிழ்விக்கும் கதைகளைக் வழங்கும் ஆர்வத்தையும்  எனக்கு அளிக்கிறது. இன்ஸ்பெக்டர் ரிஷி எங்கள் அனைவரது கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தின் பலனாக விளைந்தது. மக்கள் இந்த நிகழ்ச்சியை பெருமளவு விரும்பு வதைக் கண்டு நாங்கள் நன்றியோடு மன நிறைவாக உணர்கிறோம்.”

இந்தத் தொடர் இயற்கைக்கு மாறான அல்லது வழக்கத்தை மீறிய சம்பவங்கள் நிறைந்த ஒரு புதிரான மற்றும் மூளையை கசக்கிப் பிழியும் ஒரு வழக்கின் விசாரணையை எதையும் சந்தேகத்தோடு ஒற்றைக் கண் பார்வையில் காணும் குற்றப் பிரிவு ஆய்வாளர் ரிஷி நந்தன்  தனது நம்பிக்கைக்குரிய இரண்டு துணை ஆய்வாளர்கள் அய்யனார் மற்றும் சித்ரா ஆகியோரின் உதவியோடு,மேற்கொள்வது குறித்து பேசுகிறது. தனிப்பட்ட முறையில் தான் எதிர்கொள்ளும் தடைகளைத் தாண்டி மர்மமான கொலைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர அவர் இடைவிடாத முயற்சியில் ஈடுபடுகிறார்.

நந்தினி ஜே.எஸ் உருவாக்கி எழுதிய இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரை, சுக்தேவ் லஹிரி தயாரித்துள்ளார். இதில் பன்முக திறமை கொண்ட நடிகர் நவீன் சந்திரா முன்னணி வேடத்தில் நடிக்க அவரோடு இணைந்து, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்து எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தற்போது  பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Previous Post

‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் பிரமாண்ட டீசர் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகிறது!

Next Post

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, இனிதே பூஜையுடன் துவங்கியது !!

Next Post

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, இனிதே பூஜையுடன் துவங்கியது !!

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.