• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“என்னால் காத்திருக்க முடியவில்லை” ; பையா ரீ ரிலீஸ் குறித்து நடிகர் கார்த்தி, நடிகை தமன்னா உற்சாகம்

by Tamil2daynews
April 10, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“என்னால் காத்திருக்க முடியவில்லை” ; பையா ரீ ரிலீஸ் குறித்து நடிகர் கார்த்தி,  நடிகை தமன்னா உற்சாகம்

 

பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த சில படங்கள் தற்போதைய இளைஞர்களும் பார்த்து ரசித்து அதே அனுபவத்தை பெரும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி கடந்த 14 வருடங்களுக்கு முன்பு வெளியாகி இளைஞர்களை கிறங்கடித்த ‘பையா’ திரைப்படமும் படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரீலீஸ் ஆகிறது.

இயக்குநர் லிங்குசாமி டைரக்ஷனில், கார்த்தி, தமன்னா நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த படம் காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்சன், பாடல்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக நடிகை தமன்னாவுக்கு இந்த படம் தான் தமிழ் சினிமாவில் முதல் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு தற்போது வரை தமன்னாவின் திரையுலக பயணம் ஏறுமுகத்திலேயே சென்று கொண்டிருக்கிறது என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த நிலையில் ‘பையா’ படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மீண்டும் ரீலீஸ் செய்யப்படுவதை அடுத்து நடிகர் கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்தார்   டைரக்டர் என்.லிங்குசாமி.

“பையா எப்ப பாத்தாலும் அது புதுசாக தான் இருக்கும். இன்னொரு ஸ்பெஷலிட்டி.. படத்த எந்த பகுதியிலிருந்தும் பாக்கலாம்.. குழப்பமே இல்லாத திரைக்கதைன்னு என் நண்பர்கள் எப்பவுமே  சொல்லுவாங்க.. படத்தில் கார் டிராவலாகட்டும்.. சின்ன சின்ன சுவாரசியமான காதல் காட்சிகளாகட்டும்.. கலர் கலரான டிரசாகட்டும்.. யுவனின் பாட்டுகள்.. மதியின் அசத்தலான ஒளிப்பதிவாகட்டும்.. படபிடிப்பில் என் கூடவே இருந்த வசனகர்த்தா பிருந்தா சாரதியாகட்டும், மக்கள் கொண்டாடிய தமன்னாவாகட்டும்.. எல்லாமே ஒரு சுகமான அனுபவம். அதன் பிறகு தியேட்டரில் ரசிகர்கள் குடும்ப குடும்பமாக கொண்டாடியதாகட்டும்.. !” Watch Paiyaa | Prime Video

இப்படி பல விஷயங்களை கார்த்தி சொல்ல..#பையா பட அனுபவங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

இதே போல் பையா குறித்து உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை தமன்னா. இது குறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறும்போது,

“14 வருடங்களுக்குப் பிறகும் கூட ‘பையா’ படத்தின் மீதான அன்பு இப்போதும் குறையாமல் பலமாக இருப்பதை பார்ப்பதே சிறப்பான உணர்வை தருகிறது. இந்த காலகட்டத்தில் கூட இந்த படத்திற்கு கிடைத்து வரும் பாசத்தையும் அன்பையும் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமாக உணர்கிறேன். என் மனம் உற்சாகத்தால் நிரம்பியுள்ளது. மீண்டும் பெரிய திரையில் ‘பையா’ படத்தின் மேஜிக்கை உங்கள் அனைவருடனும் சேர்ந்து அனுபவிப்பதற்காக என்னால் காத்திருக்க முடியாது. இயக்குநர் லிங்குசாமி சார், கார்த்தி, யுவன் சங்கர் ராஜா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் இப்படி அற்புதமான நினைவுகளை கொடுத்ததற்காக முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தமன்னா.

பையாவில் இசை சாம்ராஜ்யம் நடத்திய இசை இளவல் யுவன் சங்கர் ராஜா குறிப்பிடும் போது, வரும் 11ம் தேதி மீண்டும் அந்த அழகிய மேஜிக்கல் லவ் ஸ்டோரியை சில்வர் ஸ்கிரீனில் பார்க்க ஆர்வமாக உள்ளது என்று கூறியிள்ளார்.
Previous Post

‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Next Post

அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் தண்டர் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும், பான் இந்தியா திரைப்படம், “நாகபந்தம்” !!

Next Post

அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் தண்டர் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும், பான் இந்தியா திரைப்படம், "நாகபந்தம்" !!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0
  • *‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது*  

    0 shares
    Share 0 Tweet 0
  • பாசத்தில் போட்டிபோடும் அண்ணன் தங்கை கதை…

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.