• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் ‘குரங்கு பெடல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

by Tamil2daynews
May 1, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் ‘குரங்கு பெடல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

 

‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’. இது ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

படத்தின் எழுத்தாளர் ராசி அழகப்பன்,
“இந்தப் படத்தின் கதை ஆறு வயதில் எனக்கும் என் அப்பாவுக்கும் நடந்த ஒன்று. அதை படமாக்கிய இயக்குநர் கமலக்கண்ணனுக்கு நன்றி. சைக்கிள் கிராமத்தின் அடிப்படை வாகனம். கிராமங்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் இதைப் பார்க்கலாம். எல்லோருமே சைக்கிள் ஓட்டியிருப்பீர்கள். அதனை நினைவுப்படுத்தும் வகையில் இந்தப் படம் இருக்கும். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை” என்றார்.

வசனகர்த்தா பிரபாகரன்,
“சரியான நேரத்தில் சரியான நபர் இந்தப் படத்தை வெளியிடுகிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். ‘அந்த காலத்துல…’ என கதை ஆரம்பிப்பவர்களை தேடிப்பிடித்தோம். ஏனெனில், அவர்களிடம் சொல்வதற்கு நிறைய கதைகளும் நினைவுகளும் இருக்கும். இந்தப் படத்தில் வேலை பார்த்தவர்களும் இது அவர்களுடைய படம் என்று நினைத்துதான் வேலை பார்த்தனர். நீங்களும் படம் பார்த்து ஆதரவு கொடுங்கள்”.

ஒளிப்பதிவாளர் சுனில் பாஸ்கரன்,
“படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் ப்ரோ, ‘உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார். படத்தை பிரசண்ட் செய்ய சொன்னோம். அதை சரியாக செய்து கொடுத்தார். அவருக்கு நன்றி”.

இயக்குநர், பாடலாசிரியர் பிரம்மா,
“சமீபகாலங்களில் குழந்தைகளுக்கான படங்கள் எதுவும் வருவதில்லை. எல்லாம் வன்முறை படங்கள் தான். பல வருடங்கள் கழித்து குழந்தைகளுக்கான படமாக ‘குரங்கு பெடல்’ வந்துள்ளது. பெரிய நம்பிக்கையை இந்தப் படம் கொடுக்கும். எனக்குப் பிடித்த இந்தப் படம் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

எடிட்டர் சிவநந்தீஸ்வரன்,
“குழந்தைகளுக்கான படம் இல்லை என்பது உண்மைதான். இப்போது வரும் படங்கள் நம்முடைய குழந்தைகளை நெருக்குதலுக்கு ஆளாக்குகின்றன. நம்முடைய பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் அமைதியாக அமர்ந்து இந்தப் படம் பார்க்கலாம். டிஜிட்டல் உலகம் குழந்தைகளை எப்படி மாற்றுகிறது என்பது பயமாக இருக்கிறது. அதனால் குழந்தைகள் என்ன பார்க்க வேண்டும், என்ன கேட்க வேண்டும் என்பதை பெற்றோராக தீர்மானிக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. அதற்கான சிறு முயற்சி தான் இந்த படம். அதற்கான பிளாட்ஃபார்ம் அமைத்துக் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி”.

நடிகர் ஜென்சன் திவாகர்,
“படத்தைப் போலவே படப்பிடிப்பும் ரிலாக்ஸாக இருந்தது. இயக்குநர் கமல் அண்ணா ரொம்ப பொறுமையாக எங்களை ஹேண்டில் செய்தார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.

தயாரிப்பாளர் சவிதா,
” இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்து படத்தை வெளியிட்டு கொடுக்கும் சிவகார்த்திகேயன் சார் வரைக்கும் அனைவருக்கும் நன்றி. ‘குரங்கு பெடல்’ கதை கேட்டதும் உடனே நான் கனெக்ட் ஆகிவிட்டேன். சைக்கிள் நம்முடைய முன்னேற்றத்தில் முக்கியமானது. குறிப்பாக, பெண்களுக்கு பல சுதந்திரம் கொடுத்தது”.

தயாரிப்பாளர் சஞ்சய்,
“எங்கள் எஸ்.ஆர்.ஜே. புரொடக்‌ஷன்ஸின் முதல் படம். படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி!”.

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் கலை,
” இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. இண்டர்நெட், மொபைல் இல்லாத காலக்கட்டத்தில் வாழ்க்கை எப்படி நிதானமாக இருந்தது என்பதை இதில் பார்க்கலாம். இந்தப் படத்தின் முக்கிய ஸ்ட்ரென்த் இயக்குநர் கமலக்கண்ணன், தயாரிப்பாளர் சவிதா. நிச்சயம் பலருக்கும் நினைவுகளைத் தூண்டி விடும்”.

நடிகர் காளி வெங்கட்,
“இந்தப் படம் எனக்கு மிக முக்கியமானது. என் வாழ்க்கையின் பல முக்கிய தருணங்களை இந்தப் படம் நினைவுப்படுத்தி இருக்கிறது. ‘குரங்கு பாடல்’ கோவா ஃபிலிம் பெஸ்டிவல் ஒன்றில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றது. எங்க அப்பா எனக்கு சைக்கிள் ரெடி பண்ணி கொடுத்த நியாபகங்கள் எல்லாம் எனக்கு இந்தப் படத்தில் வந்தது. உங்களுக்கும் பிடிக்கும்”.

இசையமைப்பாளர் ஜிப்ரான்,
” இந்தப் படம் பார்த்ததும் எனக்கு கனெக்ட் ஆகிவிட்டது. நமக்கு மீசை முளைப்பதற்கு முன்னால், நாம் பெரிய பையனாகி விட்டோம் எனச் சொல்வது சைக்கிள்தான். ‘வாகை சூடவா’ படத்திற்குப் பிறகு கிராம சூழலில் இசை செய்ய இந்தப் படம் வாய்ப்புக் கொடுத்தது. படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.

இயக்குநர் கமலக்கண்ணன்,
“இந்தப் படம் மக்களிடம் போய் சேரக் காரணமாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை அவர்களுடைய சொந்த படமாக நினைத்து உருவாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி. சென்சிபிளான படம் எடுத்துள்ளோம். பார்த்துவிட்டு செல்லுங்கள்”.

Previous Post

ஏற்காட்டில் பஸ் கவிழ்ந்து விபத்து, பல பேர் பலி..!

Next Post

ப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது!!

Next Post

ப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது!!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.