• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘Hit List ‘ – விமர்சனம்

by Tamil2daynews
May 31, 2024
in விமர்சனம்
0
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘Hit List ‘ – விமர்சனம்

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் விக்ரமன். இவரது மகன் விஜய் கனிஷ்கா. இவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஹிட்லிஸ்ட்..

 

 

கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்று கருதுபவரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரின் கொள்கைகளை கடைபிடித்து வாழும் மென்பொறியாளர் நாயகன் விஜய். இவரது அம்மா சித்தாரா, தங்கை என அமைதியாக வாழும் ஒரு குடும்பம்.

அனைவர் மத்தியிலும் நல்ல பெயரை சம்பாதித்து மிகவும் நல்லவர் என்ற பெயருடன் வாழும் நாயகனின் அம்மாவையும், தங்கையும் திடீரென முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் கடத்துகிறான்? கடத்திய மர்மநபர் சிறு உயிரைக் கூட கொல்லக்கூடாது என்ற கொள்கையுடன் வாழும் நாயகன் விஜய்யை மிரட்டி இரண்டு கொலைகளைச் செய்யச் சொல்கிறான். அந்த முகமூடி அணிந்த மர்மநபர் யார்? அந்த மர்மநபர் எதற்கு சைவ உணவை மட்டுமே உண்டு, சிறு எறும்பைக் கூட கொல்லக்கூடாது என்று வாழும் கொள்கை கொண்ட நாயகனை கொலை செய்யச் சொல்கிறான்? அந்த முகமூடி அணிந்த மர்மநபரிடம் இருந்து எப்படி நாயகன் தனது தங்கை, அம்மாவை காப்பாற்றுகிறார்? நாயகனுக்கும், முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையே நடக்கும் அந்த யுத்தத்தில் நாயகனை மீட்டு, குற்றவாளியை எப்படி கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி சரத்குமார்? இதற்கெல்லாம் காரணம் என்ன? என்பதற்கு விடை சொல்கிறது ஹிட் லிஸ்ட்.

படத்தின் நாயகன் விஜய் கனிஷ்கா அப்பாவித்தனமான, பயந்த சுபாவமான, அம்மா தங்கையை காப்பாற்ற போராடும் ஒரு மகனாக நடிப்பில் விக்ரமனின் மகன் என்பதை நிரூபித்துள்ளார். காவல்துறையினருக்கும், அந்த முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் தவிப்பை மிக அழகாக வௌிப்படுத்தியுள்ளார். முதல் படம், மிகப்பெரிய இயக்குனரின் மகன் என்பதால் காதல், டூயட் என கதைக்கு தேவையில்லாத விஷயங்கள் படத்தில் இடம்பெறாதது மிகப்பெரிய பலம்.

குறிப்பாக, இடைவேளைக்கு முன்பு வரும் மிகப்பெரிய ரவுடியாக உலா வரும் காளிக்கும்( கே.ஜி.எஃப். வில்லன் கருடா ராம்), நாயகனுக்கும் இடையில் நடக்கும் சண்டைக்காட்சி படத்திற்கு மிகப்பெரிய பலம். முதல் பாதியில் சரத்குமாருக்கு எந்தவொரு ஆக்‌ஷன் காட்சிகளும் பெரியளவில் இல்லாத நிலையில், இரண்டாம் பாதியில் தொடக்கத்திலே சரத்குமாருக்கு சண்டைக் காட்சிகள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

இரண்டாம் பாதியில் சிறந்த இயக்குநர்களில் ஒருவரின் வருகை ரசிகர்களுக்கு சர்ப்ரைசாகவே இருந்தது. குறைந்த நேரம் வந்தாலும் நிறைவான நடிப்பையும், முக்கியமான கதாபாத்திரமாகவும் வருகிறார். எதற்காக இது அனைத்தும் நடக்கிறது என்று முகமூடி அணிந்த மர்மநபர் தரும் விளக்கம் யதார்தத்திற்கு நெருக்கமானதாக அமைகிறது. படத்தின் உச்சகட்ட ட்விஸ்டே முகமுடி அணிந்து வரும் மாஸ்க் மேன் யார்? என்பதுதான். சமுத்திரக்கனி குறைந்த நேரமே வந்தாலும் தன்னுடைய படங்களில் சொல்லும் சமூக கருத்துக்களைப் போல, அதற்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

படத்தின் மைனசாக இருப்பது முக்கிய கதாபாத்திரமான முகமூடி அணிந்த மர்மநபரின் உடல்மொழி ஆங்காங்கே அந்நியன் பட விக்ரமை நினைவுக்கு கொண்டு வருவது. முனீஷ்காந்த், பால சரவணனை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால், அது படத்தை ஏதும் பாதிக்கவில்லை. நடிகை ஐஸ்வர்யா தத்தா தொடக்கத்தில் வரும் காட்சிகள் ஒன்றும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. இந்த காட்சிகளும், கதாபாத்திரங்களும் படத்திற்கு பெரியளவு தேவைப்படாத காரணத்தால் படத்தின் வேகம் எந்த இடத்திலும் தடைபடவில்லை. மேலும், ஹேக்கர் என்று அழைத்து வரப்படுபவரின் கதாபாத்திரம் எதற்கு என்பது போல இருந்தது.

அறிமுக இயக்குனர்கள் சூர்யகதிர் காக்கள்ளார் மற்tறும் கார்த்திகேயன் அனுபவ இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளனர். சி.சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாகும்.

ஒரு உயிர் துடிப்பதை கண்டு துடிக்கும் உயிரே புனிதமானது என்ற தத்துவத்தை உரக்கச் சொல்லும் ஹிட் லிஸ்ட் படம் குடும்பத்துடன் சென்று ரசித்து பார்ப்பதற்கு நிச்சயம் ஏற்ற படம்.

பூவே உனக்காக, புது வசந்தம், கோகுலம், சூர்யவம்சம், வானத்தைப் போல, பிரியமான தோழி என தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கிய விக்ரமனின் மகன் கதாநாயகனாக வெற்றி பெறவும் வாழ்த்துகள்.
Tags: director vikramanHit List Movie ReviewMovie ReviewSarath Kumar | hit listvijay kanishkaVikraman Son
Previous Post

‘கருடன்’ – விமர்சனம்

Next Post

கண்ணன் ரவி குழுமத்தின்(கேஆர்ஜி) ‘பராக்’ உணவகத்தின் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!

Next Post

கண்ணன் ரவி குழுமத்தின்(கேஆர்ஜி) 'பராக்' உணவகத்தின் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.