• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விகடன் விருதுகள் 2023 இல் நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது!

by Tamil2daynews
June 3, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விகடன் விருதுகள் 2023 இல் நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது!

 

அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு படம் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களால் கெளரவிக்கப்படுவது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியான தருணம். நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அப்படி பிடித்த படங்களில் ஒன்று.  இத்திரைப்படம் பல பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில், மதிப்புமிக்க விகடன் விருதுகளையும் வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த பாடல் வரிகள் உள்ளிட்ட ஐந்து விருதுகளை இப்படத்திற்கு விகடன் வழங்கி கௌரவித்துள்ளது.
Chithha' movie review: Siddharth stars in a painfully-relevant and poignantly-brilliant drama - The Hinduநடிகர் சித்தார்த் கூறும்போது,
“எங்களின்  கடின உழைப்பை பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறையினர் அங்கீகரிப்பதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பத்திரிக்கையாக விகடன் அதன் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது. இதுமட்டுமல்லாது, திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பிலும் வெற்றிகரமாக பல விஷயங்களை செய்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. விகடனின் அங்கீகாரமும் அதன் நடுநிலையான விமர்சனமும் பல  திரைப்படங்களுக்கு தூணாகவும் முதுகெலும்பாகவும் இருந்து வருகிறது. இவை அனைத்தும் அந்தப் படத்தின் மதிப்பையும் உயர்த்துகிறது. ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ‘சித்தா’ திரைப்படம் விகடனில் இருந்து மிகப் பெரிய கவுரவத்தைப் பெறுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
மேலும், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ‘இந்தியன்2’ படத்தில் திரையை பகிர்ந்து கொள்வது குறித்து கேள்வி எழுப்பியபோது, “நான் ஒரு நடிகனாக வருவதற்கு முன்னால் உதவி இயக்குநராகதான் என் பயணத்தைத் தொடங்கினேன். கமல்ஹாசன் எனக்கு குருவாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். அவருடன் பணிபுரியும் போது அவரிடம் இருந்து நுணுக்கங்களையும் அவரது பன்முகத்தன்மையையும் கற்றுக்கொண்டது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் ஒவ்வொரு புரோமோஷனிலும் நானும் இருக்க விரும்பினேன். ஆனால்,  முந்தைய கமிட்மென்ட் காரணமாக ‘இந்தியன் 2’ ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போவது எனக்கு வருத்தம்தான். ‘இந்தியன்2’ திரைப்படம் எனது கரியரில் மிகச்சிறந்த படமாக இருக்கும். இந்த விலைமதிப்பற்ற வாய்ப்பை எனக்கு வழங்கிய லைகா புரொடக்ஷன்ஸ், இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு நன்றி. திரையரங்குகளில் பார்வையாளர்களுடன் சேர்ந்து நானும் படம் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

Previous Post

தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா

Next Post

“பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ‘வெப்பன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது” – நடிகர் சத்யராஜ்!

Next Post

“பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ‘வெப்பன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது” - நடிகர் சத்யராஜ்!

Popular News

  • பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.