• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

”எமோஷன், ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அதிக எண்டர்டெயின்மெண்ட்டோடு ‘வெப்பன்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது” – நடிகர் வசந்த் ரவி!

by Tamil2daynews
June 5, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

”எமோஷன், ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அதிக எண்டர்டெயின்மெண்ட்டோடு ‘வெப்பன்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது” – நடிகர் வசந்த் ரவி!

 

நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, தனது இயல்பான நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம் ஜூன் 7, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

படம் குறித்து நடிகர் வசந்த் ரவி கூறும்போது, ”’வெப்பன்’ திரைப்படத்தின் விஷுவல் புரோமோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அபரிதமான வரவேற்பு எங்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. படத்தையும் பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம். எமோஷன்ஸ், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றின் கலவையாக படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை பார்வையாளர்களை நிச்சயம் இந்தப் படம் மகிழ்விக்கும். ஒரு நடிகராக நான் எப்போதும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து எனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். அந்த வாய்ப்பு ‘வெப்பன்’ படத்தில் நடந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இந்த வாய்ப்புக்காக மில்லியன் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர் குகன் சென்னியப்பனுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.Image’வெப்பன்’ பற்றி நிறைய விஷயங்களை பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அது படம் பற்றிய ஸ்பாய்லராக மாறிவிடும். உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் சாருடன் இந்தப் படத்தில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது” என்றார்.Image’வெப்பன்’ திரைப்படத்தை குகன் சென்னியப்பன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் மில்லியன் ஸ்டுடியோ படத்தைத் தயாரித்துள்ளது. சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வெப்பன்’ படத்தில் வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா எடிட்டிங், கலை இயக்குநர் சுபேந்தர் பி.எல். மற்றும் ஆக்‌ஷன் சுதேஷ் கையாண்டுள்ளார்.

Previous Post

“மக்களுடைய மனநிலையை, மக்களின் வலியை சொல்லும் விதமாக இந்தப்படம் உண்மையை பேசி இருக்கிறது…

Next Post

’அஞ்சாமை’ படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் பாராட்டு

Next Post

’அஞ்சாமை’ படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் பாராட்டு

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.