• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

’அஞ்சாமை’ படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் பாராட்டு

by Tamil2daynews
June 6, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

’அஞ்சாமை’ படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் பாராட்டு

 

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், கமர்ஷியல் வெற்றிகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நல்ல தரமான படைப்புகள் மக்களை சென்றடைய வேண்டும், நல்ல படைப்பாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்கிற நோக்கில் படங்களை வெளியிட்டுவருகிறது.ஜோக்கர், அருவி, பர்ஹானா, கடந்த வருடம் வெளியான இறுகப்பற்று என தொடர்ந்து வித்தியாசமான, அதேசமயம் சமூக விழிப்புணர்வுக்கான படங்களை கொடுத்து வருகிறது.
அந்தவரிசையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் நாளை (ஜூன்-7) வெளியாக உள்ள படம் ‘அஞ்சாமை’. திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ளார். விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் நீட் தேர்வை மையப்படுத்தி, அதேசமயம் உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளது.
இந்தப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று (ஜூன்-5) மாலை திரையிடப்பட்டது. படம் பார்த்த பத்திரிகையாளர்கள் பலரும், வளர்ந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோராக நடித்துள்ள விதார்த், வாணி போஜன் இருவரின் நடிப்பையும் அவர்கள் இந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட துணிச்சலையும் வெகுவாக பாராட்டினர். வணிக ரீதியிலான படங்களை நோக்கி செல்லாமல், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விதார்த்துக்கு இந்தப்படம் அவரது திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என்றும் கூறினர்.

நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துவரும் நடிகை வாணி போஜன் இந்தப்படத்திற்கு பிறகு இன்னும் உயரம் செல்வார் என்றும், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறுவார் என்றும் பாராட்டினர்.

தனது முதல் படத்திலேயே, நீட் போன்ற சமூகத்தில் பரபரப்பாக பேசப்படுகின்ற ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதேசமயம் எந்த சார்பும் இல்லாமல் கத்திமேல் நடப்பது போன்ற திரைக்கதையுடன் அழகாக படமாக்கியுள்ள அறிமுக இயக்குநர் சுப்புராமன் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இயக்குநராக வெளிச்சம் பெறுவார் என்றும் அவர்கள் பாராட்டினர்.
Previous Post

”எமோஷன், ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அதிக எண்டர்டெயின்மெண்ட்டோடு ‘வெப்பன்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது” – நடிகர் வசந்த் ரவி!

Next Post

மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”

Next Post

மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”

Popular News

  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிக்பாஸ் ராஜு ஜெயமோகனின் இயக்கி, நடிக்கும் டார்க் ஹியூமர் கதையான ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் இணைந்த ‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ படங்கள் புகழ் ஜீவன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.