• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த ‘காளிதாஸ் 2

by Tamil2daynews
July 9, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த ‘காளிதாஸ் 2

 

2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’.  காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார்- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, டி. சிவா – அம்மா கிரியேஷன்ஸ்,  கதிரேசன்- ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ், அருண் விஸ்வா- சாந்தி டாக்கீஸ், அம்பேத்குமார்- ஒலிம்பியா மூவிஸ்,  சினிஷ்-  சோல்ஜர் ஃபேக்டரி, கருணா மூர்த்தி- ஐங்கரன் இன்டர்நேஷனல், குமார்- லார்க் ஸ்டுடியோஸ், தேவராஜு மற்றும் ஃபைவ் ஸ்டார் கல்யாண்,  விநியோகஸ்தர்கள் அழகர்சாமி, அரவிந்த் – ஆருத்ரா பிலிம்ஸ், ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் பாபு, இயக்குநர் கே.  கல்யாண், ‘டார்க்’ பட இயக்குநர் ஜெகன், ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், வேல்ராஜ், சக்தி, சண்டை பயிற்சி இயக்குநர் பாண்டியன், இணை இயக்குநர் ஆதிஷ்.. உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.Image

‘காளிதாஸ்’ படத்தை தொடர்ந்து ‘காளிதாஸ் 2’ படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌ இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். துரைராஜ் கலை இயக்கத்தையும், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளையும் கவனிக்கிறார்கள்.   நிர்வாக தயாரிப்பை பழனியப்பன் மேற்கொள்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்கை பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் தயாரிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து  தயாரிக்கிறார்கள்.Image

இவர் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ ஆகிய திரைப்படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கிறார். இவர் தயாரிப்பில் ‘காளிதாஸ் 2’ படம் உருவாகுவதால்.. திரைப் பட ரசிகர்களிடையேயும், திரை ஆர்வலர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் தொடக்க விழாவைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படமான, நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது!

Next Post

கதையின் நாயகனாக மீண்டும் யோகி பாபு நடிக்க, சங்கர் பிக்சர்ஸ் டி.சங்கர் திருவண்ணாமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பூபால நடேசன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘கான்ஸ்டபிள் நந்தன்’!

Next Post

கதையின் நாயகனாக மீண்டும் யோகி பாபு நடிக்க, சங்கர் பிக்சர்ஸ் டி.சங்கர் திருவண்ணாமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பூபால நடேசன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'கான்ஸ்டபிள் நந்தன்’!

Popular News

  • வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.டி.நாயுடு(GDN) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.