• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழக – கேரள எல்லை பகுதியில் கொட்டப்படும் கழிவுகள்.. உண்மைச் சம்பவத்தை அலசும் “அலங்கு”

by Tamil2daynews
October 15, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழக – கேரள எல்லை பகுதியில் கொட்டப்படும் கழிவுகள்.. உண்மைச் சம்பவத்தை அலசும் “அலங்கு”

 

DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரிக்கும் ஆக்ஷன் திரைப்படம் “அலங்கு” கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் முதல் பிரதியை பார்த்து ரசித்து உலகம் முழுவதும் வெளியிடும் உரிமைகளை வாங்கி இருக்கிறது Sakthi Film Factory.

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து , மாறுபட்ட கதைக்களம்  கொண்ட பல திரைப்படங்கள் அவ்வபோது வெற்றிபெறுவது வழக்கம் , இவ்வருடமும் அதைபோல பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில்  “அலங்கு “ திரைப்படமும் இணையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை  S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார்.

தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் SP. சக்திவேல்.மேலும், இத்திரைப்படம் முற்றிலும் ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி உள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர்.  இவர்களுடன் நாய் ஒன்றும்  ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறது.

இந்த திரைப்படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார். இவர் “உறுமீன்”, “பயணிகள் கவனிக்கவும்” என்ற இரு திரைப்படங்களை இயக்கியவர். இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக  மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே  திரைக்கதையின் பிரதானம்.

படத்தின் 95% காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். அதுவே  படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் படி படம் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த “செல்ஃபி” திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது.

CAST & CREW

நடிகர்கள்:
குணாநிதி, , காளிவெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர்.

படக் குழுவினர் ;
எழுத்து & இயக்கம் : SP. சக்திவேல்
ஒளிப்பதிவு : S.பாண்டிகுமார்
இசை : அஜீஷ்
கலை இயக்குனர் :  P.A. ஆனந்த்
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
சண்டை பயிற்சி : தினேஷ் காசி
விலங்கு பயிற்சி : செந்து மோகன்
ஆடை : T.பாண்டியன்
ஆடை வடிவமைப்பு : ஜோஸ்வா  மாக்ஸ்வெல் J
பாடல் : மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன்
கலரிஸ்ட்  : ரங்கா
கிராபிக்ஸ்&வண்ணம் : பிக்சல் லைட் ஸ்டூடியோ , Dnote
தயாரிப்பு நிர்வாகி : S.முருகன்
மக்கள் தொடர்பு : R.குமரேசன்
விளம்பர வடிவமைப்பு : தண்டோரா & தினேஷ் அசோக்
நிர்வாக தயாரிப்பு : D.சங்கர்பாலாஜி
தயாரிப்பாளர் : D.சபரீஷ், S.A. சங்கமித்ரா
தயாரிப்பு நிறுவனம் : DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS

Previous Post

சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்!

Next Post

விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், தாரக் சினிமாஸின் பான் இந்தியா திரைப்படம் நாகபந்தம், படத்தினை மெகாஸ்டார் சிரஞ்சீவி துவக்கி வைத்தார் !!

Next Post

விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், தாரக் சினிமாஸின் பான் இந்தியா திரைப்படம் நாகபந்தம், படத்தினை மெகாஸ்டார் சிரஞ்சீவி துவக்கி வைத்தார் !!

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.