• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ராக்கெட் டிரைவர்’ – விமர்சனம்

by Tamil2daynews
October 19, 2024
in விமர்சனம்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ராக்கெட் டிரைவர்’ – விமர்சனம் 

 

மறைந்த ஐயா அப்துல் கலாமை நினைவுபடுத்தும் ஒரு படம் ராக்கெட் டிரைவர்.

இயற்பியல் பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் உயர் கல்வி பெற முடியாத ஏழ்மையான சூழலில், பிரபாவின் விண்வெளி அறிவியல் அறிஞர் ஆகும் கனவு தகர்ந்து விடுகிறது. இதனால் அன்றாடம் ஆதங்கத்திலேயே கழியும் மனநிலை யுடன் சென்னையில் ஆட்டோ ஓட்டிப் பிழைக்கிறான் பிரபா. அவனுடைய ரோல் மாடல் அப்துல் கலாம்.

இந்த உலகத்தில் உன்னோட கனவு, என்னோட கனவை விடப் பெரிய விஷயங்கள் நிறைய இருக்கு பிரபா. என்னைக்காவது ஒருநாள் அது உனக்குப் புரியும்” என்று அறிவுரை வழங்கும் வுமன் டிராபிக் கான்ஸ்டபில் கமலா, அவனைத் தன்னுடைய சொந்தத் தம்பியைப் போல் அரவணைக்கிறார். இப்படிப் போகும் பிரபாபின் நாட்களில் குறுக்கே வருகிறார் 16 வயது ஏ.பி.ஜே.அப்துல் கலாம். ஆமாம்! நமது முன்னாள் குடியரசுத் தலைவரும், இளையோர் உலகின் வழிகாட்டியாக விளங்கிய அதே கலாம் தான்.

1948இல் இருந்து நிகழ்காலத்துக்கு வந்துவிடும் அவரை, அடையாளம் கண்டு கொள்கிறான் பிரபா. 2023ஆம் ஆண்டிலிருந்து 1948 ஆம் ஆண்டுக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகிறான். 16 வயது கலாம் எதற்காக இப்போது வரவேண்டும், தாம் காலப் பயணம் செய்து வந்த நோக்கத்தை அவரும் பிரபாவும் கண்டு பிடித்தார்களா? கலாம் திரும்பவும் கடந்த காலத்துக்குச் சென்றடைந்தாரா என்பது கதை.
Actress Sunainaa Rocket Driver Movie Exclusive Stills | KK Infotainment

பொதுவாக ஹாலிவுட்டிலிருந்து வரும் ஃபேண்டஸி காமெடி டிராமா வகைப் படங்களில், வாழ்க்கை வரலாறு, நகைச்சுவை, தத்துவம் மூன்றும் இணையும் கதைக்களம் என்றால் அதிர்ச்சியளிக்கக்கூடிய செயற்கையான திருப்பங்கள் வந்து அயர்ச்சியூட்டும். இதில் நெகிழ்ச்சியான திருப்பங்கள் அடுத்தடுத்து அணிவகுக்கின்றன.

வாழ்க்கையில் சின்ன விஷயங்கள், சில்லறைத்தனமான விஷயங்கள் என நினைக்கும் எதுவும் அதன் உள்ளார்ந்த மதிப்பில் உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருப்பதைப் படம் தெளிந்த நீரோடை போல் சித்தரிக்கிறது.

சிறுவயது கலாமாக வரும் தேசிய விருதுபெற்ற நாகவிஷாலும் பழுத்த பழமாக வந்தாலும் இளைஞனைப் போல் துள்ளியிருக்கும் காத்தாடி ராமமூர்த்தியும் மனதில் தங்கிவிடுகிறார்கள். பிரபாவாக வரும் விஷ்வத், கமலாவாக வரும் சுனைனா ஆகியோரும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். ‘அவரும் செத்துட்டாரா?’ பாடல் உட்பட, கதைக் களத்தை தூக்கி நிறுத்தும் அற்புதமான இசையைத் தந்திருக்கிறார் கௌஷிக் க்ரிஷ்.

அறிவியலையும் தத்துவத்தையும் இணைக்கும் அட்டகாசமான முயற்சியைச் சுவாரஸ்யம் குறையாமல் முயன்றுள்ள ஸ்ரீராம் ஆனந்த சங்கரின் வரவு நல்வரவாகட்டும். இப்படியொரு திரைக்கதையைத் தேர்வு செய்து தயாரித்ததற்காக
இப்படத்தின் தயாரிப்பாளர் அனிருத் வல்லபையும் பாராட்டலாம்.
Previous Post

நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

Next Post

‘ஆலன்’ – விமர்சனம்

Next Post

'ஆலன்' - விமர்சனம்

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.