• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாடகி சுசித்ரா மீது இசையமைப்பாளர் குற்றச்சாட்டு!

by Tamil2daynews
November 30, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பாடகி சுசித்ரா மீது இசையமைப்பாளர் குற்றச்சாட்டு! 

 

பாடகி சுசித்ராவை பாட வைத்து,  “டைட்டானிக் சன்னி சன்னி” என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா. பாடலை பாடி கொடுத்த பாடகி சுசித்ரா, பாடலின் பிரமோஷனுக்கு எந்த வித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. கொடுக்கவும் முடியாது என்று தீர்மானமாக கூறிவிட்டார். இதனால் மனம் வருந்திய இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா, பாடல் பதிவின் போது தன்னைப் பற்றி பெருமையாக சுசித்ரா பேசியுள்ள வீடியோவை, நான் இனி எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்த போவதில்லை என கூறிவிட்டார்.

நடிகர் கரண் நடித்த ‘கந்தா’ என்ற படத்திற்கு இசையமைத்தவர் சக்தி ஆர் செல்வா. உடல்நிலை சரியில்லாமல் சில காலம் ஓய்வில் இருந்த அவர், மீண்டும் சினிமாவில் இசை அமைப்பதற்காக,”டைட்டானிக் சன்னி சன்னி” என்ற இந்த இசை ஆல்பத்தை தானே எழுதி, இசையமைத்து, சுசித்ராவுடன் டூயட் பாடினார். ஆனால் பாடலின் பிரமோஷனில் எனது பெயரை எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றும், தனக்கு பெண்கள் இடையே மிகப்பெரிய நல்ல பெயர் இருக்கிறது. அந்தப் பெயரை நீங்கள் ‘அறுவடை செய்யக்கூடாது’ என கூறிவிட்டார் சுசித்ரா.

இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா இதைப்பற்றி பேசுகையில்… ‘கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா என பல பிரபலங்களை சம்பந்தமே இல்லாமல், அவதூறாக பேசும் பாடகி சுசித்ரா, தான் பாடிய பாடலைப் பற்றி பேச மாட்டேன் என்கிறார்’ என்று ஆதங்கப்படுகிறார் இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா.

கடந்த இரண்டு வருடங்களாக சுசித்ராவிற்கு சரியான வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் நான் அவர் குரலின் மீது வைத்திருந்த நம்பிக்கையில், அவரை பாட வைத்தேன். ஆனால் அவர் தனது புகழை, நான் அறுவடை செய்யக்கூடாது என பேசி, என் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார் என்கிறார் இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா.

பாடகி சுசித்ரா சில நேரங்களில் அம்பியாகவும், திடீரென அந்நியனாகவும் மாறுகிறார் எனறு குற்றச்சாட்டு வைக்கிறார் இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா.

https://youtu.be/myCrHI8NZBI?si=E4o69B2f21lY6zPE
Previous Post

குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில், “கேம் சேஞ்சர்” படத்திலிருந்து, இந்த வருடத்தின் மிகச்சிறந்த மெலடி “லைரானா” பாடல் வெளியாகியுள்ளது!

Next Post

லைகா புரொடக்‌ஷன்ஸ், சுபாஸ்கரன் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்!

Next Post

லைகா புரொடக்‌ஷன்ஸ், சுபாஸ்கரன் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ் – The Paradise ‘ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் ‘தேடியே போறேன்…’ பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பாம்பாட்டம்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.