• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘பாம்பாட்டம்’ – விமர்சனம்

by Tamil2daynews
February 23, 2024
in விமர்சனம்
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘பாம்பாட்டம்’ – விமர்சனம்

 

பெரும் பொருட் செலவில் இந்தி நடிகை மல்லிகா செராவத்தை வைத்து ஹிந்தி மார்க்கெட்டுக்காக பிரமாண்டமாக எடுத்திருக்கும் படம் பாம்பாட்டம்.

நான் அவன் இல்லை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் ஜீவன். அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பாம்பாட்டம். வடிவுடையான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் சலில் அன்கோலா, ரமேஷ் கண்ணா, ஆண்ட்ரியா குருநாதன், லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, ரிக்கின், சரவணன், சக்தி சரவணன், ரித்திகா சென், மல்லிகா ஷெராவத், சுமன் என பலர் நடித்துள்ளனர். அம்ரிஷ் இசையமைக்க, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை இனியன் மற்றும் சுரேஷ் கையாண்டுள்ளனர்.  ஜீவன் இந்த படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த இந்த படம் தற்போது பிப்-23ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Pambattam Movie Stills | Chennaionlineசுதந்திரத்திற்கு முன்னால் நடக்கும் இந்த கதையில் ராணி மகாதேவி தனது சமஸ்தானத்தை ஆட்சி செய்து வருகிறார். அந்த சமயத்தில் ஒரு ஜோசியர் நீங்கள் பாம்பு கடித்து இறந்து விடுவீர்கள் என்று கூறுகிறார். இதனால் அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொள்ளுமாறு உத்தரவிடுகிறார் ராணி மகாதேவி.  அதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து அவரை கொன்று விடுகிறது, மேலும் ராணி மகா தேவியின் மகளுக்கும் இதே ஆபத்து உள்ளது என்று ஜோசியர் கூறுகிறார். இதனால் அவர்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றுவதாக ஊர் முழுக்க பேசப்படுகிறது. இந்நிலையில் இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக ஜீவன் வருகிறார், அதன் பின்பு என்ன ஆனது என்பதே பாம்பாட்டம் படத்தின் கதை.
Pambattam Movie Stills | Yashika Aannand | Jeevan | Rithika Senஆக்சன், அட்வென்ச்சர் மற்றும் பேண்டஸி நிறைந்த படமாக பாம்பாட்டம் உருவாகியுள்ளது.  ஜீவன் அப்பா மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  போலிஸ் அதிகாரியாக அவர் வரும் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் சுமன், ரித்திகா சென், லிவிங்ஸ்டன், சக்தி சரவணன் ஆகியோரும் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

அம்ரீஷ் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்

படம் முழுக்கவே நிறைய இடங்களில் சிஜி காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அவை ஒரு சில இடங்களில் நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் சிஜி சற்று மோசமாகவே உள்ளது. இது படம் பார்க்கும்போது ஒரு பெரிய உறுத்தலாகவே இருக்கிறது.

இரண்டு மணி நேரம் பத்து நிமிடங்கள் ஓடும் திரைப்படம் சற்று நெளியவைக்கின்றது இன்னும் சில காட்சிகளை நீக்கி இருந்தால் வெகுவாக கவர்ந்திருக்கும்.மொத்தத்தில் ‘பாம்பாட்டம்’ திரைப்படம் ரசிகர்களுக்கு எலியாட்டம்
Previous Post

‘வீரா’ பாடல் வெளியீடு : நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் இறுதிப்போரைப் பற்றி ஒரு பாடல்

Next Post

‘ரணம் அறம் தவறேல்’ – விமர்சனம்

Next Post

'ரணம் அறம் தவறேல்' - விமர்சனம்

Popular News

  • விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.