• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் நட்சத்திரம் மேகா ஷெட்டி!

by Tamil2daynews
February 20, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் நட்சத்திரம் மேகா ஷெட்டி!

 

தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது. மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் முன் அனுபவம் இல்லாமலேயே இவர் இந்த இடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மங்களூரில் பிறந்த இவர் முதன்முதலில் வெற்றிகரமான கன்னட சீரியல் ‘ஜோதே ஜோதேயலி’ மூலம் நடிப்புத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.

நடிப்புத் துறைக்குள் அறிமுகமானதில் இருந்தே, மேகா ஏழு கன்னட படங்களில் நடித்துள்ளார். ‘டிரிபிள் ரைடிங்’, ‘தில்பசந்த்’ மற்றும் ‘கைவா’  ஆகிய படங்கள் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. அவரது அடுத்த படமான ‘ஆஃப்டர் ஆபரேஷன் லண்டன் கஃபே’ வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது, அதே நேரத்தில் ‘கிராமாயணா’ மற்றும் ‘சீட்டா’ படத்தின் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
கன்னட சினிமாவில் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் நடிக்க இருக்கிறார் மேகா. இந்தப் படங்களில் அவர் தனது நடிப்புத் திறனை மட்டுமல்லாமல் நடனத் திறமையையும் வெளிப்படுத்த இருக்கிறார்.  தென்னிந்திய சினிமாவிலும் தனது முத்திரையை பதிக்கும் பொருட்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசுவதற்கும் பயிற்சி எடுத்து வருகிறார் மேகா.

தனது நடிப்புத் திறனை முழுவதும் வெளிப்படுத்தும் விதமாக சவால் நிறைந்த கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறார் மேகா. சினேகா, நதியா போன்ற நடிகைகள் தங்களது அழகு, திறமை போன்ற விஷயங்களால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே தானும் முத்திரை பதிக்க வேண்டும் என நினைக்கிறார் மேகா.
“ஒரேவிதமான கதாபாத்திரத்தில் மட்டுமே நான் நடிக்க விரும்பவில்லை. எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்” என்றார்.

திறமை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தொழில்துறையில் வளர்ந்து வரும் நற்பெயருடன், மேகா ஷெட்டி தென்னிந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Previous Post

“2K லவ்ஸ்டோரி” நன்றி அறிவிப்பு விழா !!

Next Post

“ஜென்டில்வுமன்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Next Post

"ஜென்டில்வுமன்" திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.