• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட டிரெய்லர் வெளியானது !!

by Tamil2daynews
May 3, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சூரியின்  “மாமன்” திரைப்பட டிரெய்லர்  வெளியானது !!

 

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க,  விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்”  திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த டிரெய்லர், குடும்ப உறவுகளின் அன்பை, சிக்கல்களை, உறவுகளின் பெருமையை நெஞ்சம் இளக சொல்கிறது.  இந்த அழகான டிரெய்லரில் தாய்மாமனாக சூரி, பாசத்தை, ஏக்கக்தை, வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.  அவரின் நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக இப்படம் இருக்கும் என்பதை இந்த டிரெய்லர் உறுதி செய்கிறது.

குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் டிரெய்லர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
Imageஇப்படத்தின் கதையை நடிகர் சூரி எழுதியுள்ளார். விலங்கு சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

சூரி நாயகனாக  நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில்,  சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை, ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் மே மாதம்  16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து, இயக்கம் – பிரசாந்த் பாண்டியராஜ்
தயாரிப்பு – K குமார்
தயாரிப்பு நிறுவனம் – Lark Studios
கதை – சூரி
இசை – ஹேசம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்
கலை இயக்கம் – G துரை ராஜ்
படத்தொகுப்பு – கணேஷ் சிவா
சண்டைப்பயிற்சி – மகேஷ் மேத்யூ
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

https://youtu.be/RFxRhOVGp4U

Previous Post

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த ‘துகில்’ நிறுவனத்தின் புதிய கிளை

Next Post

சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

Next Post

சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

Popular News

  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் புதிய இணையதளத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துவக்கினார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.