• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மாமன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
May 17, 2025
in விமர்சனம்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மாமன் – விமர்சனம் 

 யாருடைய சப்போட்டும் இல்லாமல் தனி மனிதனாக சிறு சிறு கதாபாத்திரங்களில்  படம் மாமன்.

படத்தில் சூரியின் அக்கா தான் சுவாசிகா. இவருக்கு திருமணம் ஆகி பத்தாண்டுகள் கடந்துமே கர்ப்பமாகவில்லை. இதனால் ஊரில் உள்ள அனைவருமே சூரியின் அக்காவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் முதல் முறையாக சுவாசிகா கர்ப்பம் ஆகிறார். இதனால் சூரி தன் அக்காவை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். அதன் பின் ஆண் குழந்தையும் பிறக்கிறது.

தனக்கு மருமகன் பிறந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் தன்னுடைய ஒட்டுமொத்த அன்பையுமே

சூரி தன்னுடைய மருமகனுக்கு கொடுக்கிறார். காலையில் எழுந்து அவனை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்புவது, அவனை தூங்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது என பெற்றோர்கள் செய்ய வேண்டிய அனைத்து வேலையுமே சூரி செய்கிறார். இதனால் அவன் ஒரு நிமிடம் கூட தன்னுடைய தாய் மாமனை விட்டு பிரியாமல் இருக்கிறான்.

இந்த சூழ்நிலையில் தான் சூரிக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகும் சூரியை விட்டு அவருடைய மருமகன் பிரியாமல் கூடவே இருக்கிறார். ஆரம்பத்தில் இதை ஐஸ்வர்யா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை வருகிறது. சூரிக்கும் ஐஸ்வர்யாவிற்கும் சண்டை ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவருமே பிரிய முடிவே எடுக்கிறார்கள். இதனால் உறவுகள் இடையே விரிசல் ஏற்படுகிறது.
Maaman Stills - Pictures | nowrunning

மீண்டும் அந்த உறவுகள் இணைந்ததா? சூரி- ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை. படத்தில் கதாநாயகன் சூரி ரொம்ப யதார்த்தமாக தன்னுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார். அக்காவுக்கு தம்பி ஆகவும், மருமகனுக்கு மாமனாகவும், மனைவிக்கு நல்ல கணவனாகவும் ஒவ்வொரு காட்சியிலும் சூரி சிறப்பாக நடித்தி இருக்கிறார். குறிப்பாக, பாசப் போராட்டத்தில் தவிக்கும் ஒரு ஆண் எப்படி எல்லாம் இருப்பான் என்பதையும் தன்னுடைய நடிப்பின் மூலம் சூரி காண்பித்திருக்கிறார்.

இவரை அடுத்து படத்தில் வரும் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சுவாசிகா இருவரின் நடிப்பும் படத்திற்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. இவர்கள் இருவருமே தங்களுடைய நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் வேற லெவலில் தூள் கிளப்பி இருக்கிறார்கள். சூரியின் மருமகனாக நடித்த சிறுவனுடைய நடிப்பும் அற்புதமாக இருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுடைய வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
Maaman' movie review: Soori, Aishwarya Lekshmi shoulder a flawed melodrama - The Hindu

இயக்குனர் பாச போராட்டத்தை மையமாகக் கொண்டு கதைக்களத்தை எடுத்திருப்பது சிறப்பு. ஆனால், படம் முழுக்க முழுக்க எமோஷனலாக இருப்பதால் கொஞ்சம் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு இன்னும் கொஞ்சம் தெளிவாக கதையை சொல்லி இருக்கலாம். எமோஷனல் காட்சிகள் படத்திற்கு பலமாக இருந்தாலும் சில நேரத்தில் அது பலவீனமாகவே இருக்கிறது. கொஞ்சம் காமெடியும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக 2k கிட்ஸ்க்கு இவ்வளவு எமோஷனல் தேவையா? என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது.

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை. இயக்குனர் எடுத்துக்கொண்ட கதைகளத்தை கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார். அதோடு கதாபாத்திரங்களையும் சிறப்பாக தேர்வு செய்து இருக்கிறார். ஒளிப்பதிவு பின்னணி இசை எல்லாமே படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. எடிட்டிங் நன்றாக இருக்கிறது.

 மாமன் என்ற உறவை உன்னதமாக உரக்க சொல்லி இருக்கும் இந்த பரோட்டா  சூரியின் மாமன் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.
Previous Post

ஜோரா கைய தட்டுங்க – விமர்சனம் ரேட்டிங் – 3 – 5

Next Post

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

Next Post

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

Popular News

  • ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கொல்லிமலை ஆகாய நீர்வீழச்சியில் உருவான முதல் திரைப்படம்..

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.