• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

டிடி நெக்ஸ்ட் லெவல் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
May 17, 2025
in விமர்சனம்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
டிடி நெக்ஸ்ட் லெவல் – விமர்சனம் 

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. நடிகர் ஆர்யா இப்படத்தை தயாரித்துள்ளார். ‘தில்லுக்கு துட்டு’ வரிசையில் நான்காவது பாகமாக இப்படம் வெளிவருகிறது.

யூ டுப் சேனலில் புதிய படங்களை விமர்சனம் என்ற பெயரில் பங்காமாக ‘கிசா’ என்ற பெயரில் கிண்டல் செய்கிறார் கிருஷ்ணா (சந்தானம்). இதனால் பாதிக்கப்படும் தயாரிப்பாளர், கிருஷ்ணாவையும் அவரது குடும்பத்தையும் ஒரு பேய் படத்திற்குள் கதாபாத்திரங்களாக சிக்க வைக்கிறார். இந்த சிக்கலில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் சந்தானம். இந்த பேய் யார்? என்ன செய்தது? என்பதுதான் டி டி நெஸ்ட் லெவல் படத்தின் கதை.
Devil's Double Next Level' movie review: Santhanam's barely funny, least scary addition to an uneven franchise - The Hindu

இது வரை பேய் படமென்றால் பங்களாவுக்குள் பேய், டப்பாக்குள் பேய் என்றுதான் பார்த்திருப்போம். ஆனால் பேய் படத்திற்குள் ஒரு கதாபாத்திரமாக மாட்டி கொள்வது என்று மாற்றி யோசித்த ஐடியாவுக்காக டைரக்டர் பிரேம் ஆனந்தை பாராட்டலாம். நிஜ வாழக்கையில் சந்தானத்தின் அம்மாவாக வரும் கஸ்தூரி பேய் கதைக்குள் கிளாமர் பெண்மணியாக மாறுவது, ஆட்டோ டிரைவர் அப்பா பேய் கதையில் கப்பல் கேப்டனாக வருவது, அடக்கமாக வரும் தங்கை பேய் கதைக்குள் கவர்ச்சியாக மாறுவது போன்ற வித்தியாசமான ஐடியாக்களின் மூலம் டைரக்டர் தனித்துவமாக தெரிகிறார்

முதல் பாதியில் சந்தானம் காமெடி மழையில் நினைய வைத்து விட்டார் என்றே சொல்லலாம். ரசிகர்கள் அதிகம் கை தட்டுவதை கேட்க முடிகிறது. இரண்டாம் பாதியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவத்தை குறைத்து சீரியஸில் ஸ்கோர் செய்கிறார்.

எப்போதும் சீரியஸாக நடிக்கும் செல்வராகவன், கெளதம் மேனன் போன்றவர்களை கூட காமெடி செய்ய வைத்து சிரிக்க வைத்திருக்கிறார் டைரக்டர். மாறன், மொட்டை ராஜேந்திரன் போன்ற சந்தானத்தின் ஆஸ்தான நடிகர்களை விட செல்வராகவன், கெளதம் மேனன் வரும் காட்சிகளில்தான் சிரிப்பு அதிகம் வருகிறது.
DD Next Level Twitter Review: 9 tweets to read if you are planning to watch Santhanam's horror comedy movie in theaters | PINKVILLA

குறிப்பாக செல்வராகவன் சினிமா விமர்சகர்களை பற்றி பேசும் வசனங்கள் ஹைலைட்டாக இருக்கின்றன. தீபக் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் என்றால் ஆப்ரோவின் பின்னணி இசை மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். இவரது பின்னணி இசை, பேய் கதையில் நாமே மாட்டி கொண்டது போல் ஒரு உணர்வைத் தருகிறது.

 நண்பர்களான ஆர்யாவும், சந்தானமும் சேர்ந்து வித்தியாசமான பின்னணியில் இந்த கோடையில் ஜில்லென்ற ஒரு மாறுபட்ட காமெடி படத்தை தந்துள்ளார்கள். டி டி நெஸ்ட் லெவல் – சந்தானத்தின் சரவெடி.

 வருடா வருடம்   மே மாதம் என்றால் கோடை விடுமுறையை தாண்டி இது சந்தானத்தின் காமெடி மாதம் என்றே சொல்லலாம்
Previous Post

லெவன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

ஜோரா கைய தட்டுங்க – விமர்சனம் ரேட்டிங் – 3 – 5

Next Post

ஜோரா கைய தட்டுங்க - விமர்சனம் ரேட்டிங் - 3 - 5

Popular News

  • ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.