• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

DNA – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
June 21, 2025
in விமர்சனம்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
DNA – விமர்சனம் 
நடிகர் அதர்வா சினிமா வாழ்க்கையில் முதல் வெற்றி படம் என்று சொல்லி இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
அதர்வா, நிமிஷா, பாலாஜி சக்தி வேல்,சேத்தன்  இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.காதல் தோல்வியால் குடி பழகத்திற்கு ஆளாகி சுற்றி கொண்டிருக்கிறார் அதர்வா. கால் கட்டு போட்டால் சரியாகும் என்று நினைக்கும் பெற்றோர்கள் சற்று வெகுளி போல் இருக்கும் நிமிஷாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். அதர்வாவும் திருந்தி குடும்பம், வேலை என்று இருக்கிறார். சில மாதங்களில் இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கிறது. மருத்துவ மனையில் குழந்தை பிறந்த சில நிமிடங்கள் கழித்து தன் குழந்தையை பார்க்கும் நிமிஷா “இது என் குழந்தை இல்லை” என்று கத்தி கூச்சல் போடுகிறார்.
Dna Tamil Movie - Photo Galleryகுடும்பத்தினரும், மருத்துவ மனை நிர்வாகமும் இதை ஏற்க மறுக்கிறார்கள். அதர்வா குழந்தையின் ரத்த மாதிரியை எடுத்து DNA டெஸ்ட்க்கு அனுப்புகிறார். சில நாட்களில் இது இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை இல்லை என்ற அதிர்ச்சி DNA ரிசல்ட் வருகிறது.

இவர்களுக்கு பிறந்த குழந்தை என்ன ஆனது? என்பதை ஒரு மெடிக்கல் கரைம் திரில்லர் பின்னணியில், மலையாள, ஹிந்தி த்ரில்லர் திரைப்படஙகளுக்கு இணையாக தந்துள்ளார் டைரக்டர். இதனுடன் குழந்தை எமோஷன் என்ற அம்சத்தையும் சரியாக உணர்த்தி உள்ளார். படம் தொடங்கி அரைமணி நேரத்திற்கு பிறகு பரபரப்பாக நகரும் திரைக்கதையில் நாம் எதிர் பார்க்காத பல ட்விஸ்ட்கள் உள்ளன.

நடிப்பில் முதல் மதிப்பெண் பெறுவது நிமிஷா தான். வெகுளியாக வரும் போதும், குழந்தை தனது இல்லை என்று ஆர்ப்பாட்டம் செய்யும் போதும், வளர்த்த குழந்தையை பிரிய மனமில்லாமல் தவிக்கும் போதும் நடிப்பில் ஆஹா சொல்ல வைக்கிறார்.

இரண்டாவது மதிப்பெண் பெறுவது பாலாஜி சக்தி வேல். ஒரு வயதான ஏட்டையாவாக தனது பருமனான உடலில் அற்புதமான உடல் மொழியை தந்திருக்கிறார்.
DNA' movie review: A froth of contrivance floats over big, promising ideas - The Hindu

தனக்கு ஒரு வெற்றி வேண்டும் என்பதை புரிந்து கொண்டு ஆக்ஷன், எமோஷன் இரண்டையும் கலந்து தந்திருக்கிறார் அதர்வா. “நம்ம நாட்டுல பணம், காசு இல்லைன்னா கூட கண்டுக்க மாட்டான். ஆனால் குழந்தை இல்லைன்னா அந்த கீரை சாப்பிடு, இந்த டாக்டரை பாரு, பரிகாரம் பண்ணு என ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணு வான். குழந்தைக்காக தவம் இருக்கும் தம்பதிகள் இருக்கும் இதே நாட்டில் தான் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் நிறைய பேர் இருக்காங்க” என வரும் வசனம் நம்மை யோசிக்க வைக்கிறது.

படத்தின் பாடல்களை விட இறுதியில் வரும் கைலாய வாத்திய இசை சிறப்பாக உள்ளது. படத்தில் தேவையில்லாமல் வரும் ஒரு குத்து பாடலை தவிர்திருக்கலாம்.

இந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஒரு சில தமிழ் படங்களின் வரிசையில் DNA படம்  இடம் பிடித்திருப்பது பெரும் மகிழ்ச்சி.

அனைவரும் பார்க்க வேண்டிய படம்
Previous Post

குபேரா – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பிரம்மாண்டப் படைப்பாக உருவாகும் ‘கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Next Post

சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பிரம்மாண்டப் படைப்பாக உருவாகும் ‘கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.