ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடித்துள்ள படம் 3BHK. மீதா ரகுநாத் , சரத்குமார் , தேவயானி , சைத்ரா , யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சாந்தி டாக்கீஸ் சார்பாக அருண் விஸ்வா இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்.
மனைவி சாந்தி(தேவயானி), மகன் பிரபு (சித்தார்த்), மகள் ஆர்த்தியுடன் (மீதா ரகுநாத்) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் வாசுதேவன்(சரத்குமார்). குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆளும் வாசுதேவன் தான். சொந்தமாக வீடு வைத்திருப்பது என்பது மரியாதை என நினைப்பவர் அவர்.
தங்களுக்கு என்று சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கனவு காண்பதுடன் பணமும் சேர்த்து வைக்கிறார் வாசுதேவன். ஆனால் வீடு வாங்க கிட்டத்தட்ட பணம் சேரும்போது கூடவே ஏதாவது செலவு வந்து அதை நடக்கவிடாமல் செய்கிறது.
மகன் பிரபு படித்து நன்றாக சம்பாதித்து தன்னுடைய வீடு கனவை நிறைவேற்ற உதவி செய்வான் என நினைக்கிறார் வாசுதேவன். ஆனால் பிரபுவுக்கு படிப்பு வரவில்லை. அதனால் டொனேஷன் கொடுக்க வேண்டியதாகிவிடுகிறது. மேலும் மகளின் கல்யாண செலவு வருகிறது. வாசுதேவனுக்கு உடல்நலம் பாதித்து மருத்துவமனை செலவு வந்துவிடுகிறது.
வாசுதேவனின் சுமார் 20 ஆண்டு கால வீடு கனவு என்னவாகிறது என்பதே 3 பி.ஹெச்.கே. படத்தின் கதை ஆகும். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்வோம் என ஆசைப்படும் போது இன்னொரு வாடகை வீட்டிற்கு செல்லும்போது சரத்குமார் முகத்தில் தெரியும் வேதனையை நடுத்தர வர்க்கத்தினரால் உணர முடிகிறது.
46 வயதான சித்தார்த் 3 பி.ஹெச்.கே. படத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார். அவரை பார்த்தால் பள்ளி மாணவன் போன்றே தெரிகிறது. அவருக்கு வயதே ஆகாதா என வியக்க வைக்கிறார். பிரபு கதாபாத்திரமாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் சித்தார்த்.
வீடு வீடு என கனவு காணும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் சரத்குமார். மீதா ரகுநாத் தனக்கு கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார். சரத்குமார், தேவயானியை சேர்ந்து பார்க்கும் போது சூர்யவம்சம் படம் கண் முன்பு வந்து போகிறது.
அதில் வரும் முக்கிய கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். புரோக்கராக வரும் யோகி பாபு சிரிக்க வைக்கிறார். அம்ரித் ராம்நாத்தின் இசை படத்திற்கு பக்கபலம்.வாழ்க்கையில் எத்தனை பிரச்சனை வந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் கனவை நோக்கி பயணிப்பது தான் நடுத்தர வர்க்கம் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் ஸ்ரீ கணேஷ்.
திரைக்கதையில் இதை சற்று தவிர்த்து இருக்கலாம் இயக்குனர்.
குறைக்காத நாயுமில்லை,குறை சொல்லாத வாயும் இல்லை, என்ற சொல்லுக்கு 3 BHK படம் அற்புதமான உதாரணம்.








