• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காந்தாரா திரைப்படத்திலிருந்து ருக்மணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது !!

by Tamil2daynews
August 8, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
காந்தாரா திரைப்படத்திலிருந்து ருக்மணி வசந்தின்  ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது !!

வரமஹாலக்ஷ்மி திருவிழாவின் இந்த புண்ணிய நாளில், ஹோம்பாலே பிலிம்ஸ்,ருக்‌மிணி வசந்தை ‘கனகவதி’ (Kanakavathi) எனும் கதாபாத்திரமாக, காந்தாரா அத்தியாயம் 1 படத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று வெளியாகிறது.

இந்திய கலாச்சாரத்தில் புனிதமும் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட வரமஹாலக்ஷ்மி திருநாளில், வரவிருக்கும் மாபெரும் திரைப்படமான “காந்தாரா அத்தியாயம் 1”  இன் நாயகியாக நடிக்கும் நடிகை ருக்‌மிணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டரை, ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது.

இப்படத்தை எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கதைக்களத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி, மக்களிடமும்  விமர்சகர்களிடமும் பெரும்  பாராட்டுக்களைக் குவித்த “காந்தாரா” படத்தின் முன்கதையைச் சொல்லும் (Prequel) படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இவ்வருடத்தின் தொடக்கத்தில், நாயகன் ரிஷப் ஷெட்டியின் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்தநாளன்று வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டதை அறிவித்த “Wrap -Up” வீடியோ, படத்தின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தி, படத்தின் மீது பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போது, கனகவதி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியீடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் கதை, இந்திய பாராம்பரியத்தின் வேர்களைப் பற்றிய  ஆழமான கதையைச் சொல்வதோடு, விஷுவலாக வேறொரு உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். ஒளிப்பதிவாளர் அர்விந்த் S . காஷ்யப் (Arvind S. Kashyap’s)உடைய கண்கவர் ஒளிப்பதிவும், B. அஜநீஷ் லோக்நாத் (Ajaneesh Loknath) வழங்கியுள்ள ஆன்மாவை வருடும் இசையும், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்  விஜய் கிரகந்தூரின் ( Vijay Kiragandur) பிரம்மாண்ட தயாரிப்பும், இப்படத்தை இதுவரை இல்லாத பேரனுபவமாக உருவாகியுள்ளது.

“காந்தாரா அத்தியாயம் 1” உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று, கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் மொழிகளில்  வெளியாகிறது.

இன்றைய தினம் நாடு முழுவதும் மகாலட்சுமி தேவியின் அருளைப் பெறும் நேரத்தில்,
உலகம் முழுவதும் பார்வையாளர்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெறவிருக்கும் கனகவதி பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வழங்குகிறது.

Previous Post

ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. ‘கூலி’ மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்: ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ-ரிலீஸ் விழாவில் கிங் நாகார்ஜுனா

Next Post

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Next Post

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Popular News

  • சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ராம் அண்ட் லீலா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மொத ராத்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • கௌரி கிஷனைச் சுற்றி பயணிக்கும் பல பெண்கள்… ‘தாரகை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

”நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’ திரைப்படமும் நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!

August 21, 2026

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

August 21, 2026

செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘டிஸ்கோ’ – நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

August 21, 2026

விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 21, 2026

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

August 21, 2026

“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

August 21, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.