• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ராம் அண்ட் லீலா – விமர்சனம்

by Tamil2daynews
August 21, 2026
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ராம் அண்ட் லீலா – விமர்சனம்

 

ரியோ, வர்த்திகா, சேத்தன், முனீஷ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், மாபாஃபா ஆனந்த், பாலாஜி தியாகராஜன் தயாளன், தாஃபியா அபு, கவின் ஜி.டி மற்றும் பலர்.

​தொடர் காதல் தோல்விகளால் மனச்சோர்வடையும் கதாநாயகன் ராம், ஒரு ரயில் பயணத்தின் போது லீலாவை சந்திக்கிறான். முதல் பார்வையிலேயே ஏற்படும் ஈர்ப்பு, இருவருக்கும் இடையே மலரும் காதலும் அவர்களின் வாழ்க்கை வண்ணமயமாக மாற்றுகிறது. காதல் தீவிரமடையும் வேளையில், லீலா ஒரு வித்தியாசமான நிபந்தனை விதிக்கிறாள்; மாலை 6 மணிக்கு மேல் தன்னைச் சந்திக்க கூடாது என்பதே அது. இந்த விசித்திரமான விதிக்கு பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுகள் என்ன, லீலாவின் கடந்த கால பின்னணி என்ன, மற்றும் ராம் இந்த மர்மத்தை உடைத்து காதலில் வென்றானா என்பதை நகைச்சுவை, காதல் மற்றும் விறுவிறுப்பான தருணங்களுடன் சொல்வதே மீதிக்கதை.
ரியோ, தனது அப்பாவியான முகபாவனைகள் மூலமும், இயல்பான டைமிங் நகைச்சுவையிலும் கதாபாத்திரத்திற்கு முழுமையாக உயிர் கொடுத்துள்ளார். இளமை உணர்வையும் நவீன பாணியையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது இவரது நடிப்பு; காதல் மற்றும் பதற்றமான காட்சிகளில் உணர்ச்சிகளைத் துல்லியமாக வெளிப்படுத்தி, அமைதியும் நிதானமும் நிறைந்த நடிப்பை வழங்கி, பார்வையாளர்களைக் கட்டிப் போடும் கரிஷ்மாவுடன் திரையில் மிளிர்கிறார்.
கதாநாயகியாக அறிமுகமாகும் வர்த்திகா, ​ ரொமான்ஸ் மற்றும் எலிகன்ஸ்​ கலந்த தோற்றத்தில் எழில்மிகு அழகோடு மனதை மயக்கும் வகையில் அசத்தியுள்ளார். பேசும் விழிகள் மூலம் தீவிரமான உணர்வுகளைக் கடத்தி, ​ முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று தனது முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார். நேர்த்தியாகக் கையாண்ட விதம் மற்றும் செம்மையான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.
சேத்தன், மாளவிகா அவினாஷ் மற்றும் தீபா வெங்கட் ஆகியோர் தீர்க்கமான ஆயத்தத்துடன் தங்களது அனுபவமிக்க நடிப்பால் திரைக்கதை நகர்வுக்கு வலு சேர்த்து, கதையின் தீவிரமான உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். முனீஷ்காந்த் மற்றும் மாபாஃபா ஆனந்த் கூட்டணி தங்களது இயல்பான நகைச்சுவையால் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கி, அதகளப்படுத்தியுள்ளனர். பாலாஜி தியாகராஜன் தயாளன், அறிமுக நடிகை தாஃபியா அபு மற்றும் கவின் ஜி.டி ஆகியோர் சமமான கதாபாத்திரத்தை பெற்று, முழு ஈடுபாட்டுடன் நேர்த்தியான நடிப்பு வெளிப்படுத்தித் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்தி ஒட்டுமொத்தக் கதைக்கும் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன் தனது கேமராவின் விசித்திரமான கோணங்கள் மூலம் எழில்மிகு காட்சிகளை ​ கச்சிதமாக பதிவு செய்து​ செய்து, ஒவ்வொரு பிரேமிலும் காட்சிகள் அழகியலை மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் அங்கித் மேனனின் மெல்லிசையும் பின்னணி இசையும் மனதை மயக்கும் உணர்வைத் தருகின்றன. கதையின் சூழலுக்கு ஏற்ப மெதுவாக மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் காட்சிகளில் இசையைக் கையாண்ட விதம் அருமை.

படத்தொகுப்பாளர் வை.என்.சி. சிவா தனது கத்திரி மூலம் காட்சிகளைத் துல்லியமாக, கதையின் ஓட்டத்தை ஜனரஞ்சகமான தளத்தில் சீராக நகர்த்தி திரைக்கதை நகர்வுக்கு தொய்வு இல்லாமல் விறுவிறுப்பை ஏற்றியுள்ளார்.

இயக்குனர் ராமச்சந்திரன் கண்ணன் தனது கனவும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட கதையை திரையில் மிகச் சிறந்த முறையில் உருவாக்கியுள்ளா​ர். காதல், கிரைம் மற்றும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் கூறுகளைக் கலந்த திரைக்கதையை விறுவிறுப்பாக திரையில் கொண்டு வந்த விதம் பாராட்டுக்குரியது.

ஏற்கனவே வெளியாகி மக்களிடையே வரவேற்பு பெற்ற டபுள் ஆக்குபன்ஸி திரைப்படத்தை சற்று ஞாபகப்படுத்தினாலும் கதைக்களத்தில் வேறு மாதிரி தோன்றி ரசிகர்களை

சலிப்பு இல்லாமல் செய்கிறது.

மொத்தத்தில் ஓகே ரகம்
Previous Post

கௌரி கிஷனைச் சுற்றி பயணிக்கும் பல பெண்கள்… ‘தாரகை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Next Post

ஒன்மேன் – விமர்சனம்

Next Post

ஒன்மேன் - விமர்சனம்

Popular News

  • ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.