• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

by Tamil2daynews
August 21, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

 

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ தயாரிப்பில், யாமி கெளதம் தர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியாவின் ஃபேன்டஸி குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக ’நய்யி நவெல்லி’ உருவாகியுள்ளது. பண்டிகைக் காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து மகிழும்  திரைப்படமாக இது உருவாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹிமான்ஷு ஷர்மா மற்றும் திவ்ய நிதி ஷர்மா கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அசாதாரணமான சம்பவங்கள், குடும்பத்தில் வரும் குழப்பங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் ஏராளமான நகைச்சுவை நிறைந்த உலகத்திற்குள் பார்வையாளர்களை இப்படம் அழைத்துச் செல்லும். ‘நய்யி நவெல்லி’ 2026 அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

குழப்பங்கள் நிறைந்த மீரட் குடும்பத்தை மகிழ்ச்சியான இடமாக மாற்றுகிறாள் கதாநாயகி. ஆனால், அவளது கணவரின் தம்பிக்கு மட்டும் அனைத்திலும் சிறப்பாகத் தோன்றும் அண்ணி உண்மையில் ஒரு சூனியக்காரியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இந்திய SVOD ஒரிஜினல்ஸ் பிரிவின் இயக்குநரும் தலைவருமான நிகில் மாதோக் கூறுகையில், “’நய்யி நவெல்லி’ திரைப்படம் நிச்சயமாக தசரா பண்டிகைக்கானது என்ற உணர்வு எங்கள் அனைவருக்கும் இருந்தது. இதைவிட சிறந்த வெளியீட்டுத் தேதி இருக்க முடியாது. யாமி கெளதம் தர் அற்புதமாக நடித்துள்ளார். படக்குழுவினரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். ஆனந்த் எல். ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மாவுடன் முதல் முறையாக இணைந்துள்ளோம். அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனத்துடன் இணைந்து, இந்த தசராவுக்கு குடும்ப பார்வையாளர்களின் முதல் தேர்வாக ‘நய்யி நவெல்லி’ இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் ஆனந்த் எல். ராய் கூறுகையில், “ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் கதையாக ‘நய்யி நவெல்லி’ உருவாகியுள்ளது. ஹிமான்ஷுவும் நானும் முதன்முதலில் இந்தக் கதையைப் பற்றி விவாதித்தபோதே, ஃபேன்டஸி, நகைச்சுவை மற்றும் சாகசம் நிறைந்து குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான அன்பு மற்றும் குறும்புத்தனத்தை யாமி கெளதம் தர் நடிப்பில் சிறப்பாக கொண்டு வந்துள்ளார். அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் பல புதுமையான கதைகளை கொடுத்துள்ளது. அவர்களுடன் நாங்கள் முதன்முறையாக இணைந்துள்ள இந்த திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

நகைச்சுவை, குழப்பம் மற்றும் பிரம்மாண்டமான பண்டிகை கொண்டாட்டம் என அனைத்தையும் ஒன்றிணைக்கும் ‘நய்யி நவெல்லி’, பெரிய திரையில் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் அற்புதமான பொழுதுபோக்கு அனுபவத்தை தரவிருக்கிறது. அக்டோபர் 16, 2026 முதல் உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்கில் இந்த பிரம்மாண்டமான குடும்ப ஃபேன்டஸி உலகத்தை காணத் தயாராகுங்கள்!

Previous Post

செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘டிஸ்கோ’ – நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

Next Post

”நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’ திரைப்படமும் நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!

Next Post

”நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’ திரைப்படமும் நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.