• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரசிகைக்காக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்த மனதை உருக்கிய மனிதாபிமான செயல் !!

by Tamil2daynews
August 31, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரசிகைக்காக, மெகா ஸ்டார்  சிரஞ்சீவி செய்த மனதை உருக்கிய மனிதாபிமான செயல் !!

 

பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது கருணை மற்றும் அன்பால் நிரூபித்துள்ளார்.

சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்த அவரின் தீவிர ரசிகை ராஜேஸ்வரிக்காக சிரஞ்சீவி செய்த இதயப்பூர்வமான செயல், பலரையும்  உருகச் செய்துள்ளது.

தனது வாழ்நாள் கனவான சிரஞ்சீவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், ராஜேஸ்வரி சைக்கிளில் ஏறி தொலைதூரப் பயணம் செய்து ஹைதராபாத்தை அடைந்தார்.அத்தனை கஷ்டங்களையும், உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் தனது அன்பும், உறுதியும் அவரை அந்தப் பயணத்தில் முன்னோக்கி நகர்த்தியது. இந்த செய்தி சிரஞ்சீவியின் காதுகளில் விழுந்தபோது, அவர் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை, முழுமனதுடன் தன் ரசிகையின் அன்பை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டார்.

சிரஞ்சீவி ராஜேஸ்வரியை இதயம் நெகிழ்ந்த  அன்புடன் வரவேற்றார். அவர் காட்டிய உண்மையான அன்பையும், தனது கனவை அடைவதற்காக எடுத்த கஷ்டத்தையும் கண்டு உருகிய சிரஞ்சீவி, அந்த சந்திப்பை ரசிகையின் வாழ்நாள் நினைவாக மாற்றினார். அந்த நேரத்தில் ராஜேஸ்வரி சிரஞ்சீவிக்கு ராக்கி கட்ட, அவர் ரசிகைக்கு பாரம்பரிய புடவையை பரிசளித்து, தனது மரியாதை, ஆசீர்வாதம் மற்றும் பாசத்தை வெளிப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பில் அனைவர் நெஞ்சங்களையும்  நெகிழ வைக்கும் ஒரு அற்புதமான தருணமும் அரங்கேறியது.  சிரஞ்சீவி ராஜேஸ்வரியின் குழந்தைகளின் கல்வி பொறுப்பை ஏற்றுக் கொண்டு, அவர்களின் கல்வி பயணத்துக்கு துணையாக இருப்பதாக உறுதி அளித்து, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் உறுதியையும் வழங்கினார்.
இந்த அன்பான செயல் சிரஞ்சீவியின் மனிதாபிமானக் குணத்தை மறுபடியும் வெளிப்படுத்தியது. அளவிட முடியாத புகழையும், உயர்ந்த நிலையையும் அடைந்திருந்தும், எப்போதும் தாழ்மையுடனும், ரசிகர்களை குடும்பத்தினராகவே கருதுவதும் அவரின் அன்பு  தனிச்சிறப்பாகும்.

ராஜேஸ்வரியின் அன்புக்கு, சிரஞ்சீவி அளித்த இதயத்தை உருக்கும் பதில், ஒரு பிரபலத்தின் நற்கருணைச் செயலைவிடவும் பெரிதாகும்.  உண்மையான மகத்துவம் என்பது பரிவு, நன்றியுணர்வு, பிறரை உயர்த்தும் மனப்பான்மை என்பதற்கான வாழும் சான்றாக அவர் திகழ்கிறார்.

திரையில் அவர் மெகா ஸ்டார், ஆனால் திரைக்குப் பின்னால் அவர் உண்மையிலேயே தான் ஒரு ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

Previous Post

பாலாவிற்கு சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும்; ஷெரிஃப் தயாரிப்பாளரின் இயக்குனராக இருக்கிறார்! – இயக்குனர் பாலாஜி சக்திவேல்

Next Post

ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர்

Next Post

ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர்

Popular News

  • ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!!

    32 shares
    Share 32 Tweet 0
  • CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய ரிலீஸுக்காக புதிய தேதி விரைவில் அறிவிப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.