• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், பான்-இந்தியா திரைப்படம் “சம்பராலா ஏடிகட்டு (SYG)” – படத்தின் படப்பிடிப்பு, பீட்டர் ஹெய்ன்(Peter Hein) வடிவமைப்பில், அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ளது !!

by Tamil2daynews
September 10, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில்,  பான்-இந்தியா திரைப்படம் “சம்பராலா ஏடிகட்டு (SYG)” –  படத்தின் படப்பிடிப்பு,  பீட்டர் ஹெய்ன்(Peter Hein) வடிவமைப்பில், அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ளது !!

 

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பான்-இந்தியா திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG)”, படத்தின், மிக முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில்  துவங்கவுள்ளது.

இயக்குநர் ரோஹித் KP ( Rohith KP) இயக்கத்தில், K. நிரஞ்சன் ரெட்டி (K Niranjan Reddy ) – சைதன்யா ரெட்டி (Chaitanya Reddy ) ஆகியோர் தயாரிப்பில், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் ₹125 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இது சாய் துர்கா தேஜ் அவர்களின் இதுவரையிலான திரைப்படப் பயணத்தில், மிகப்பெரிய திரைப்படமாகும்.

செப்டம்பர் மாதத்தின் மத்தியில் துவங்கும் படப்பிடிப்பில், பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கும் அதிரடியான ஆக்ஷன் சீக்வன்ஸ்கள் படமாக்கப்படவுள்ளது. இதில் சாய் துர்கா தேஜ், ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் மோதும் காட்சிகள் படமக்காப்படவுள்ளது. படத்தின் சினிமா அனுபவத்தை உயர்த்தும் வகையில், விரிவான CGI பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
Image
கடந்த இரண்டு ஆண்டுகளாக சாய் துர்கா தேஜ், தனது முழுமையான அர்ப்பணிப்புடன், சம்பராலா ஏடிகட்டு (Sambarala Yeti Gattu) படத்திற்காக உழைத்து வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு புதிய திருப்புமுனையாகவும், உணர்ச்சிகரமான சவாலான கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது.

முதலில் தசரா வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்தாலும், தொழில்துறை வேலைநிறுத்தம் காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவிக்க உள்ளனர்.

ஹனுமேன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மிகச் சிறப்பான திட்டங்களில் ஒன்றாக SYG உருவாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள சம்பராலா ஏடிகட்டு, ஒரு முக்கியமான பான்-இந்தியா ஆக்சன் -டிராமாவாக ரசிகர்களை கவரத் தயாராகி வருகிறது.

நடிகர்கள்:
சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு, ஸ்ரீகாந்த், சாய் குமார், அனன்யா நாகல்லா, ரவி கிருஷ்ணா.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் & கதை: ரோஹித் KP
தயாரிப்பாளர்கள்: K. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
நிறுவனம்: பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்
ஒளிப்பதிவு: வெற்றி பழனிசாமி
இசை: B. அஜனீஷ் லோக்நாத்
எடிட்டிங்: நவீன் விஜய கிருஷ்ணா
தயாரிப்பு வடிவமைப்பு: காந்தி நடிகுடிகர்
உடை வடிவமைப்பு: ஆயிஷா மரியம்
கிரியேட்டிவ் புரொடியூசர் : Y. சீதாராம்

Previous Post

புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’

Next Post

உருட்டு உருட்டு – விமர்சனம்

Next Post

உருட்டு உருட்டு - விமர்சனம்

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.