• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்தியாவின் இதயத்துடிப்பை கொண்டாடும் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம்!

by Tamil2daynews
September 10, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியாவின் இதயத்துடிப்பை கொண்டாடும் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம்!

 

பணக்காரர்களும் மிகப்பெரும் வசதி படைத்தவர்களும் வாழும் இந்த உலகில் அதிகம் பேசப்படாத இந்தியாவின் மிடில் கிளாஸ் ஹீரோக்களைப் பற்றி பேசவருகிறது புதிய திரைப்படம்.

மாதத்தவணை, தள்ளுபடி, 1BHK சுற்றி இருக்கும் கனவு என நகைச்சுவை, எமோஷன்ஸ் என பல விஷயங்களை கொண்டது மிடில் கிளாஸ் வாழ்க்கை. இந்தப் படம் வெறும் கதை மட்டுமல்லாது, ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு பார்த்து, சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷப்பட்டு, வீட்டுக்கடனை விட அதிக சுமையாய் இருக்கும் மாதத்தவணை என மிடில் கிளாஸ் வாழ்க்கையின் யதார்த்தம் பற்றி பேசுகிறது.  பார்வையாளர்கள் பலரின் வாழ்வையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் படம் உருவாகியுள்ளது.

மிடில் கிளாஸ் தம்பதிகளாக முனீஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வளர்ந்து வரும் திறமையாளர்களைக் கண்டறிவதில் பெயர் பெற்ற மறைந்த தயாரிப்பாளர் டில்லி பாபுவால்  நம்பிக்கைக்குரிய கதையாக இந்த படம் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டது. அவருடைய நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக ‘மிடில் கிளாஸ்’ படக்குழு சிறந்த முறையில் பணியாற்றியுள்ளது.

தொழில்நுட்பக்குழு விவரம்:
எழுத்து, இயக்கம்: கிஷோர் முத்துராமலிங்கம்,
தயாரிப்பு: தேவ் மற்றும் கே.வி. துரை,
ஒளிப்பதிவு: சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்,
இசை: ப்ரணவ் முனிராஜ்,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்,
கலை இயக்குநர்: MSP மாதவன்,
சண்டைப் பயிற்சி: டான் அசோக்,
ஆடை வடிவமைப்பாளர்: ஜே. நந்தா,
ஒப்பனை: வினோத் சுகுமாறன்,
ஒலிக்கலவை: எம்.ஆர். ராஜகிருஷ்ணன்,
விஎஃப்எக்ஸ்: ரெசோல் எஃப்எக்ஸ்,
டிஐ: வர்ணா டிஜிட்டல் ஸ்டுடியோ,
மார்க்கெட்டிங் & புரோமோஷன் மேற்பார்வை: கேவி மோதி & DEC,
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: வியாகி,
சட்ட ஆலோசனை: எம்.வி. பாஸ்கர்.
Previous Post

வாயுபுத்ரா : இது ஒரு சினிமா மட்டுமல்ல, புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!!

Next Post

சீறிப்பாய்ந்த காளை, சிதறி விழுந்த ஹீரோ; படப்பிடிப்பில் பரபரப்பு!

Next Post

சீறிப்பாய்ந்த காளை, சிதறி விழுந்த ஹீரோ; படப்பிடிப்பில் பரபரப்பு!

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.