• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு;

by Tamil2daynews
September 12, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு;

 

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதில் ரவி மோகன், “நான் இயக்குனராகி விட்டேன்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் யோகி பாபுவை நாயகனாக வைத்து முதன்முறையாக இயக்கவிருக்கும் படம் தான் “An Ordinary Man”.அவர் படம் இயக்குவது குறித்து அவருடைய அண்ணன் மோகன் ராஜா நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், அந்த விழாவிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் கார்த்தி, நடிகர் டாக்டர் சிவராஜ் குமார், நடிகை ஜெனிலியா மற்றும் அனைத்து பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள்.

யோகிபாபு பேசும்போது, கோமாளி படத்தில் பணியாற்றும்போது ரவி நான் படம் இயக்கினால் நீங்கள் தான் ஹீரோ என்று கூறினார். ஆறு வருடம் கழித்தும் அதை மறக்காமல் இன்று நிறைவேற்றி இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் ரவி மோகன் இயக்கவிருக்கும் “An Ordinary Man” படத்தின் ப்ரோமோ ரவி மோகன் அவர்களின் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தின் ப்ரோமோ ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகம் சேர்த்துள்ளது.

இப்படத்தில் ஜெய் சாரோலா ஒளிப்பதிவு செய்ய, ஹைட்ரோ இசை அமைக்கிறார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப குழுவின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Previous Post

“‘தணல்’ படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி “- நடிகை லாவண்யா திரிபாதி!

Next Post

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருப்தி ரவிந்தரா!

Next Post

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சக்தி திருமகன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருப்தி ரவிந்தரா!

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.