• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருப்தி ரவிந்தரா!

by Tamil2daynews
September 13, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருப்தி ரவிந்தரா!

 

‘அருவி’ மற்றும் ‘வாழ்’ படங்கள் புகழ் இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ படம் மூலம் திறமையான இளம் கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார் மகாராஷ்டிரா துலேவைச் சேர்ந்த நடிகை திருப்தி ரவிந்தரா. இந்தப் படம் செப்டம்பர் 19, 2025 அன்று வெளியாகிறது.

திரை வசீகரமும் திறமையும் கொண்ட கதாநாயகிகளை தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும். அந்த வகையில், கணினி அறிவியலில் பட்டம் பெற்ற முன்னாள் மென்பொருள் பொறியாளரான திருப்தி, ஐந்து வருடங்கள் மேடை நாடக அனுபவம் பெற்ற பிறகு நடிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கிறார்.  மேடை நடிப்பில் வலுவான அடித்தளம் பெற்றது மட்டுமல்லாது ஈஸ்டர்ன் மசாலா, லிசோல், ஜெப்டோ, ஐஇடிஎல் மற்றும் சைடஸ் உள்ளிட்ட பல தேசிய விளம்பரங்களில் பணிபுரிந்த அனுபவமும் பெற்றிருக்கிறார்.

‘சக்தி திருமகன்’ படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “நான் நன்கு நடிப்பு பயிற்சி எடுத்த களம் தியேட்டர் நாடகம் தான்.  தற்போது ‘சக்தி திருமகன்’ படத்தில் இயக்குநர் அருண் பிரபு, விஜய் ஆண்டனி சார் மற்றும் படக்குழுவினருடன் பணிபுரிந்ததும் இந்தப் படம் மூலம் அறிமுகமாவதும் என் வாழ்வின் பெருமையான தருணம். இந்தப் படம் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.
தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாகவும் ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாகவும் திருப்தி தமிழ் மொழி கற்றுக் கொண்டிருக்கிறார். ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் முறைக்காக அவர் தமிழ் சினிமாவை வியந்து பார்க்கிறார்.

‘சக்தி திருமகன்’ படத்தில் கதாநாயகியாக அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானது. நடனம் மற்றும் யோகா தெரிந்தவரான திருப்தி தனது திறமையை வெளிப்படுத்தும் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் பன்மொழிகளிலும் நடிக்கத் தயாராக உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்கள் மற்றும் படங்களை கொடுக்கும் திறமையான இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார் திருப்தி.

‘சக்தி திருமகன்’ படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிம்றனர். புதுமுக நாயகி திருப்தி தமிழ் சினிமாவில் திறமை, நளினம் மற்றும் சாதுரியத்துடன் நிச்சயம் தனக்கான இடத்தைப் பிடிப்பார்!

Previous Post

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு;

Next Post

தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

Next Post

தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட 'தணல்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.