• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மிராய் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
September 13, 2025
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மிராய் – விமர்சனம் 

தெலுங்கு பட உலகில் தற்பொழுது மிகவும் வித்தியாசமான ஹனுமான் போன்ற ஹிட் உடன் தேஜா நடிப்பில் கார்த்திக் இயக்கத்தில் மீண்டும் ஒரு மித்தாலஜி படமாக வெளிவந்துள்ள மிராய்.

கி.மு 232-ல் கலிங்க போரில் அசோகர் தன்னால் நடந்த பேரழிவால் மனம் வருந்தி தன்னிடம் உள்ள சக்தியை 9 புத்தகங்களில் அடக்கி அதை 9 போர் வீரர்களிடம் ஒப்படைக்கிறார். பல யுகம் கடந்து தற்போது அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அடைந்து உலகையே அழிக்க திட்டமிடுகிறார் மனோஜ் மஞ்சு.

இதை அறிந்துக்கொண்ட ஸ்ரேயா இதை அழிக்க ஒரு வழி தன் மகன் தான் என தெரிந்துக்கொள்கிறார்.

அதோடு அம்மா பாசம் இல்லாமல் தான் யார் என்றே தெரியாமல் மகனை அநாதையாக விட வேண்டும், அந்த 9வது புத்தகத்தை வில்லன் அடைய வரும் போது தன் மகன் ராமரின் ஆயுதம் மிராஜை அடைந்து வில்லனை அழிக்க வேண்டும் என்பதே விதி.

இதற்காக ஸ்ரேயா தன் மகனை அநாதையாக வாரணாசி-ல் விட்டு செல்கிறார். அதை தொடர்ந்து 24 வருடம் கழித்து ஹீரோயின் ரித்திகா, ஸ்ரேயா மகன் தேஜாவை தேடி வந்து உண்மையை புரிய வைக்க, பிறகு என்ன தேஜா மிராஜை அடைந்தாரா, அந்த 9வது புத்தகத்தை காப்பாற்றினாரா என்ற பேண்டசி பயணமே இந்த மிராய்.
Mirai' movie review: Teja Sajja-led superhero tale is visually slick but emotionally distant in storytelling - The Hindu

தேஜா வித்தையை கற்றுக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும், நாம் 10 பேரை அடித்தால் நம்ப மாட்டார்கள் அதனால் பேண்டஸி தான் ஒரு வழி என்று ஹனுமான் தற்போது மிராஜ் என தன் கதை தேர்விலேயே கலக்குகிறார், அவரும் தன் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார், கண்டிப்பாக தேஜா திரைப்பயணத்தில் இதுவும் ஒரு மைல் கல் படம் தான்.

ஹீரோயின் என்றால் ஏதோ ஹீரோவை காதலிக்க தான் என்றில்லாமல், தேஜாவின் சக்தியை அவருக்கு உணர்த்தஅவரை தேடி அலைவது, அவருக்கு புரிய வைப்பது என ரித்திகாவிற்கும் நல்ல ரோல் தான்.

வில்லன் கதாபாத்திரத்தில் மனோஜ் மஞ்சு, 9 புத்தகங்களில் உள்ள சக்தியை அடைய வேண்டும், அதோடு உலகை ஆள வேண்டும் என்ற குறிக்கோள், அவர் உருவம் மிக பலசாலியாக இருந்தாலும், ஏதோ ஒரு வில்லத்தனம் அவரிடம் மிஸ்ஸிங், நமக்கு அங்கும் பெரிய அச்சம் வரவில்லை, அதோடு அவர் எல்லோரையும் மிக எளிதாக அழிப்பது ஒரு தடங்கல் கூட இல்லை என்பது கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.

அதோடு தானோஸ் 5 கற்களை பெற்று, உலகத்தின் மக்களை 50% ஆக சொடக்கு போட்டு அழிக்க வேண்டும், இதை சூப்பர் ஹீரோஸ் காப்பாற்ற வேண்டும் அட, இது அதுல்லா என்ற கமெண்ட்ஸ் வருவதை தடுக்க முடியவில்லை.

படத்தின் முதல் பாதி மிராய்-யை தேஜா எப்படி அடைவார் என்ற தேடல் தொடங்க, இடைவேளையில் அந்த கருடனுடன் நடிக்கும் சண்டை பிரமாண்டத்தின் உச்சம், கண்டிப்பாக சிஜி டீம்க்கு பூங்கொத்து கொடுக்கலாம்.
Mirai': Glimpse of Manoj Manchu as Black Sword from Teja Sajja's film out - The Hindu

இரண்டாம் பாதி மிராய்-யை வைத்து எப்படி தேடி வரும் வில்லனை அழித்து புத்தகத்தை தேஜா எப்படி காப்பாற்றுகிறார் என்பதே, அதற்கான பயணம் ஒரு கட்டத்திற்கு மேல் கொஞ்சம் சலிப்பு தட்டினாலும், கிளைமேக்ஸில் மித்தாலஜி பேக்டரை கொண்டு வந்த விதம் சிறப்பு.

வில்லன் கதாபாத்திரம் நிகல் காலத்தை விட வர் சிறு வயதில் காட்டப்படும் ப்ளாஸ்பேக் மிரட்டுகிறது, ஆனால், வில்லன் ஏன் இப்படி ஆனார் சிறு வயதில் அவருக்கே என்ன ஆனது என்ற பேக் ஸ்டோரி கொஞ்சம் கூட நியாமில்லாத ஒரு கதையாக உள்ளது. டெக்னிக்கலாக படம் மிக வலுவாக உள்ளது. இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால் பல மாநிலங்கள் பயனப்படும் கதையில் மிக அழகாக காட்சிபடுத்தியுள்ளார்.

சுமாரான திருக்கதையாக இருந்தாலும் அடுத்தடுத்து என்ன காட்சிகள் என்று கணிக்க கூடிய வகையில் இருப்பதால் சற்று சலிப்பு ஏற்படுகிறது.

மொத்தத்தில் இந்த மிராய் மிரட்டல்.
Previous Post

சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு பாடல் பாடியுள்ளார் !!

Next Post

யோலோ – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

யோலோ - விமர்சனம் ரேட்டிங் - 3 / 5

Popular News

  • தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாம் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தகுரல் கள்வன் – அர்ஜுன் தாஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

September 13, 2025

வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

September 13, 2025

பாம் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

September 13, 2025

காந்தகுரல் கள்வன் – அர்ஜுன் தாஸ்.

September 13, 2025

யோலோ – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

September 13, 2025

மிராய் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

September 13, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.