இயக்குனர் எஸ்.சாம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் யோலோ. இந்த படத்தை இந்த படத்தின் கதையை ராம்ஸ் முருகன் எழுதியிருக்கிறார். இந்த படத்தில் தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், பிரவீன், யுவராஜ் கணேசன், சுவாதி, திவாகர், கலைக்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சகீஷனா சேவியர் இசை அமைத்திருக்கிறார்.
அப்போது பெண் பார்ப்பதற்காக விஜே நிக்கியின் குடும்பம் தேவிகா வீட்டிற்கு வருகிறது. தேவிகாவை பார்த்த நிக்கியின் சகோதரி, உங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதே. எதற்கு மீண்டும் திருமணம் செய்கிறீர்கள் என்றெல்லாம் கேட்கிறார். இதைக் கேட்டு தேவிகா வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.அப்போது நிக்கியின் சகோதரி, தேவ் என்பவரோடு தேவிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஹனிமூன் கூட வந்திருந்தார்கள். அப்போதுதான் சந்தித்து பேசினோம் என்றெல்லாம் சொல்கிறார். ஆனால், தேவிகாவிற்கு அப்படி எதுவுமே ஞாபகம் இல்லை.


ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படத்தை நேர்த்தியாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கின்றார்.ஆனால், எல்லோரும் புதுமுகங்கள் என்பதால் பார்வையாளர்கள் மத்தியில் கவர கொஞ்சம் தாமதம் ஆகிறது.சில லாஜிக் குறைபாடுகள். சில காட்சிகள் எல்லாம் யூகிக்க கூடிய அளவிற்கு இருக்கிறது. சின்ன சின்ன குறைகள் இருந்தாலுமே படத்தை இயக்குனர் கொண்டு சென்றிருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. எல்லோரும் சென்று பார்க்கும் படமாகவும் இருக்கிறது.