• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ரைட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

by Tamil2daynews
September 21, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“ரைட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

 

RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”.
வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி  திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பத்திரிக்கை நண்பர்களுக்காக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது.
இவ்விழாவினில்..,
தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன் பேசியதாவது..
எங்கள் படத்தில் பணிபுரிந்த நட்டி சார், அருண் பாண்டியன் சார் மற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்த உறவுகளுக்கு நட்புகளுக்கும் நன்றி. இயக்குநர் எனது நண்பர், இன்னொரு நண்பர் ஜெயபாண்டி சார். அவர் மூலம் தான் இந்தப்படம் நடந்தது.  சுப்பிரமணியன் படம் செய்ய வேண்டும் என்று சொன்ன போது மூவரும் இணைந்து செய்யலாம் என்று தான் படம் ஆரம்பித்தோம். அருண்பாண்டியன் சார் பல வழிகாட்டுதல்களை தந்தார். நட்டி சார் முழுக்க முழுக்க கூட இருந்து ஆதரவு தந்தார். இயக்குநர் ஜெயித்தால் எங்கள் ஊரே சந்தோசப்படும். அனைவரும் திரையரங்கு வந்து படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
எடிட்டர் நாகூரான் பேசியதாவது..,
திரையரங்கு வந்து படம் பார்த்து ஆதரவு தாருங்கள் இயக்குநருக்கும், நட்டி சாருக்கும் நன்றி. வாய்ப்பு தந்ததற்கு தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் ஆதித்யா ஷிவக் பேசியதாவது..,
இது என் முதல் படம் என் மனதுக்கு நெருக்கமான படம், எனக்கு முதல் படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. நட்டி சார்,  அருண்பாண்டியன் சாரிடம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நிறைவான அனுபவமாக இருந்தது, அனைவருக்கும் நன்றி.
வீரம் பட நடிகை யுவினா பேசியதாவது..,
மீடியா நண்பர்களுக்கு வணக்கம், சின்ன குழந்தையாக என்னை படத்தில் பார்த்திருப்பீர்கள். இப்போ காலேஜ் பெண்ணாக இப்படத்தில் நடித்துள்ளேன். இந்த வயது பாத்திரம் நடிக்கலாம் என ஆரம்பித்த போது இப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. எனக்கு இந்த வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நட்டி சாருக்கு நன்றி. எங்கள் படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.
இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியன்
நான் இதுவரை 9 படம் செய்து விட்டேன் ஆனால் இதுதான் என் முதல் மேடை. ரமேஷ் சாருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்பமாக அனைவரும் இணைந்து செய்துள்ளோம். இப்படத்தில் ஆர்ட் ஒர்க், கேமரா,  என எல்லாமே சூப்பராக இருக்கும். நடிகர்கள் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள், எங்கள் படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
நடிகர் ரோஷன் பேசியதாவது..,
இந்த வாய்ப்பைத் தந்த ரமேஷ் சாருக்கு நன்றி. இந்த படக்குழு இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர். நட்டி சாருடன் தான் எனக்கு காட்சிகள் அதிகம் அவர் நடிப்பதை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும். நன்றி.
நிர்வாகத் தயாரிப்பாளர் ப்ரான்சிஸ் மார்க்கஸ் பேசியதாவது :..,
இந்தப்படம் பற்றி சொல்ல ஒரு புக்கே எழுதலாம். 24 நாளில் எடுக்கப்பட்ட படம், சின்ன பட்ஜெட்டில் எடுத்த படம், ஆர்டிஸ்ட் எல்லாம் அவ்வளவு கடுமையாக உழைத்தனர். இயக்குநரும் கேமராமேனும் இல்லாவிட்டால் இந்தப்படம் இவ்வளவு சீக்கிரம் எடுத்திருக்க முடியாது. படத்தில் உழைத்த உதவி இயக்குநர்கள் உட்பட அனைவரும் முழு அர்ப்பணிப்போடு உழைத்தனர். அனைவருக்கும் நன்றி. மியூசிக் இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. குட்லக் என்ஞ்சினியர்ஸ் சவுண்ட் சிறப்பாக செய்துள்ளனர். சமூக அக்கறையுடன் கூடிய  படமாக இப்படம் இருக்கும். பத்திரிக்கையாளர்கள் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.
நடிகை அக்‌ஷரா ரெட்டி பேசியதாவது..,
சினிமாவுக்கு நான் புதுசு ஆனால் தமிழ் மக்களுக்கு என்னைத் தெரியும். பிக்பாஸ் மூலம் என்னை அவர்கள் வீட்டு பெண்ணாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அம்மா தான் என்னை முழுதாக பார்த்துக்கொண்டார்கள், அவர்கள் எதிர்பாராமல் மறைந்த பிறகு எப்படி மீடியாவில் சினிமாவில் இருப்பது எனத் தயங்கினேன்.  ஆனால் இந்த டீம் என்னை மிக ஆதரவாக பார்த்துக் கொண்டார்கள், இப்படி ஒரு டீம் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் பயப்படாமல் வேலை செய்யலாம். க்ளாம் டாலாக இருக்க கூடாது என நினைத்தேன் படத்தில் மிக அழகான ரோல் தந்தார்கள். நட்டி சாருடன் வேலை பார்த்தது மிக இனிமையான அனுபவம், அருண் பாண்டியன் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். நீங்கள் எல்லோரும் படம் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி.
நடிகர் ரவிமரியா பேசியதாவது..,
அன்பார்ந்த அனைவருக்கும் வணக்கம், ரைட் டீசர் வெளியீட்டு விழா. இந்தப்படத்தில் நான் நடிக்கவில்லை, ஆனால் இந்தப்படம் நன்றாக வரவேண்டுமென வேண்டிக்கொண்டிருந்தேன். எனக்கு நெருக்கமான மூன்று பேர்  பணியாற்றியுள்ளனர். எனக்கு மிளகாய் படத்தில் வாய்ப்பு தந்து, இப்போது வரை நண்பராக இருக்கும் நட்டி அவருக்கு நன்றி, மிளகாய் படத்தில் அஸிஸ்டெண்ட் டைரக்டர் ரமேஷ், மிக திறமையானவர். இத்தனை காலம் அவருக்கு தயாரிபபாளர் கிடைக்கவில்லை அவர் படத்தை தயாரித்துள்ள திருமால் லட்சுமணன், ஷியாமளா இருவருக்கும் நன்றி. இப்படத்தை 24 நாட்களில் முடித்துள்ளார்கள், படத்தை முடிக்கும் நாட்கள் முக்கியமில்லை குறைந்த நாட்களில் எடுத்த நூறாவது நாள் பிளாக்பஸ்டர். நட்டி சார் இந்தப்படத்திற்காக எவ்வளவு குறைவாக சம்பளம் வாங்கி நடித்தார் எனத் தெரியும், ரமேஷ் மீது பெரும் அக்கறை கொண்டவர் அவர், இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும், இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை வினோதினி பேசியதாவது…,
ஊடக நண்பர்களுக்கு முதல் நன்றி, இந்த விழாவிற்கு வருகை தந்த ரவி மரியா சாருக்கு நன்றி. நட்பு பற்றி நிறைய பேசுகிறோம் நான் இந்தப்படத்திற்கு வந்ததற்கும் காரணம் நட்பு தான். மார்க்கஸ் தான் என்னை தொடர்பு கொண்டு இப்படத்தில் கொண்டு வந்தார். அவரை பல காலமாக எனக்குத் தெரியும். ரமேஷ் அவர்களை ஜில்லா படத்தில் பார்த்துள்ளேன், அவர் இப்படி இயக்குநராக, அதுவும் நண்பர்கள் தயாரிப்பில் வருவார் என நினைக்கவில்லை, அவர் முதல், பலருக்கு இது முதல் படமாக அமைவது மிகுந்த மகிழ்ச்சி. 24 நாளில் எடுத்தது எனக்கே தெரியாது, நான் ஏழு நாள் தான் நடித்தேன் பக்காவாக திட்டமிட்டு எடுத்தார்கள். இது எவ்வளவு பெரிய உழைப்பு, என பிரமிப்பாக இருக்கிறது. அருண் பாண்டியன் சார், நட்டி சாரின் நடிப்பு மிகச்சிறப்பாக வந்துள்ளது. இப்படம் கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இருக்கும், அனைவருக்கும் நன்றி.
நட்டி (எ) நட்ராஜ் பேசியதாவது..,
ரைட் ஒரு சுவாரஸ்யமான படம். ரமேஷ் என்னிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர், அவர் கதை சொன்ன போதே யார்யாரெல்லாம் நடிக்க  வேண்டும் என எழுதியே வைத்திருந்தார். அருண் பாண்டியன் சார் படத்தில் ஒரு கோ டைரக்டர் போல வேலை செய்தார். அவர் அர்ப்பணிப்பிற்கு நன்றி. அக்‌ஷரா ரெட்டி பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர், மிக கடுமையாக உழைத்துள்ளார், வாழ்த்துக்கள். யுவினா சிறப்பான நடிப்பை தந்துள்ளார். ஆதித்யாவும் சிறப்பாக செய்துள்ளார். ரோஷனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ரவிமரியா என் சிறந்த நண்பர் அவர் செய்த உதவிகள் ஏராளம் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். குணா இசையில் வாழ்ந்துள்ளார். ஆர்ட் டைரக்டர் வேலை பெரியளவில் கண்டிப்பாக பேசப்படும். படத்தின் தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். அனைவரும் இப்படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். சமூக அக்கறை மிக்க ஒரு விசயத்தை ரமேஷ் சொல்லியுள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் பாலசுப்பிரமணியம் ரமேஷ் பேசியதாவது..,
என் இயக்குநர்கள் குழுவிற்கு முதல் நன்றி. என் அம்மா அப்பா, எனக்கு தொழில் கற்றுத்தந்த குருக்களுக்கு நன்றி. எப்போதும் ஊரில் என் நண்பர்கள் எப்போது படம் செய்வாய் எனக் கேட்பார்கள், அதற்கு தயங்கியே நான் எங்கும் போகாமல் இருந்தேன். என் நண்பர் ஜெயபாண்டி தான் திருமால் சாரை அறிமுகப்படுத்தினார், இப்படத்தை தயாரித்ததற்கு திருமால் சாருக்கு நன்றி. நட்டி சார் ஆபிஸில் தான் நான் வாழ்ந்தேன். அவர் தான் நான் இப்படம் செய்யக் காரணம். இப்படம் ஒரே இடத்தில் நடக்கும் கதை நடிகர்களை ஸ்டேஜிங் செய்வது மிகுந்த சவாலாக இருந்தது. குணா மிக அற்புதமான இசையை தந்துள்ளார். தாமு சார் கலை இயக்கத்தில் அசத்தியுள்ளார். மார்க்கஸ் சார் இப்படத்திற்கு முழு சப்போர்ட்டாக இருந்தார். அக்‌ஷரா மிக கடுமையாக உழைத்தார். நன்றாக நடித்துள்ளார். வினோதினி மேடமுக்கு சொல்லித்தர அவசியமே இல்லை. யுவினா நன்றாக நடித்துள்ளார். ஆதித்யா நிறைய சப்போர்ட் செய்தார். அருண் பாண்டியன் சாரிடம் அன்பிற்கினியாள் படத்தில் நான் வேலை செய்தேன். அவரைப்பார்க்கவே ஆறு மாதம் ஆனது. அவர் என்னை வேண்டாம் என சொல்லத்தான் கதை கேட்கவே ஒப்புக்கொண்டார் ஆனால் அவர் கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார்.  அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல்நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும்? என்பது தான்  இப்படத்தின் மையம்.
ஜில்லா புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பரபரப்பான சம்பவங்களை கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான கமர்ஷியல் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் RTS Film Factory நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர்கள்  திருமால் லட்சுமணன், ஷியாமளா பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் நட்டி, அருண் பாண்டியன் இணைந்து,  முதன்முறையாக முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன்   பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், வில்லனாக ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரம் படப்புகழ் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்கவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார், அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் புதுமுகமாக  அறிமுகாகிறார்.
இப்படம் வரும் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
தயாரிப்பு நிறுவனம் – RTS Film Factory
தயாரிப்பாளர்கள் – திருமால் லட்சுமணன், T ஷியாமளா
எழுத்து, இயக்கம் – சுப்ரமணியன் ரமேஷ்குமார்
இசை – குணா பாலசுப்ரமணியன்
ஒளிப்பதிவு – M பத்மேஷ்
எடிட்டிங் – நாகூரான் ராமசந்திரன்
கலை – தாமு
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கில்
நடனம் – ராதிகா
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
Previous Post

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘Dude’ படத்தின் ‘நல்லாரு போ’ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!

Next Post

சரீரம் – விமர்சனம்

Next Post

சரீரம் - விமர்சனம்

Popular News

  • விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி!

    விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • பல்டி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சரீரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஸ்ரீகாந்த் ஒதேலா – “தி பாரடைஸ்” படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வருகிறார்!

September 27, 2025

‘டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!

September 27, 2025

இதுவரை கண்டிராத சினிமா அனுபவத்தை தர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!

September 27, 2025

இயக்குநராக களமிறங்கிய தியா சூர்யா !!

September 27, 2025

பல்டி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

September 27, 2025

STR 49: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிலம்பரசன் டி.ஆர் – வெற்றிமாறன் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகிறது!

September 27, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.