• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு

by Tamil2daynews
September 21, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு

 

சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது – நடிகர் ஷேன் நிகம்

தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 19.09.2025 அன்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அப்படத்தின் கலைஞர்கள் பேசியதாவது

தயாரிப்பாளர்  சாந்தோஷ் T. குருவில்லா பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நடிக்கும் அனைத்து கலைஞர்களும் இளம் திறமையாளர்கள். ஷேன் நிகம், சாந்தனு, சாய் அபயங்கர், உன்னி ஆகியோர் மிகவும் திறமையானவர்கள். அனைவரும் இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் பேசும்போது,
இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இப்படம் என்னுடைய கனவை நனவாகியிருக்கிறது. சாய் அபயங்கரை விட இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக யாரும் செய்திருக்க முடியாது. உதயன் பாத்திரம் ஷேன் நிகம் செய்திருக்கிறார். சாந்தனு அவருடைய கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தியிருக்கிறார். செல்வராகவன் கதாபாத்திரம் பயங்கரமாக இருக்கும்.  நான் செல்வராகவன் சாருடைய ரசிகன். இந்த பூமி கோளில் இவர் தான் மிகவும் சிறந்த மனிதர். உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசும்போது,முதன்முதலாக உங்கள் அனைவரையும் பார்க்கிறேன். நான் படம் பார்த்துவிட்டேன். நன்றாக வந்திருக்கிறது. இப்படத்திற்காக இசையமைத்ததில் மகிழ்ச்சி. இன்னும் நிறைய நல்ல வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன். அனைவரையும் பார்க்கும் போது கதாபாத்திரங்களாகவே தோன்றுகிறது என்றார்.
இயக்குனர் உன்னி சிவலிங்கம் பேசும்போது,
இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. மலையாளத்தில் எடுத்தாலும் தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருக்கிறோம். நான் மலையாளி, என்னையும் இப்படத்தையும் 60 சதவிகிதம் மலையாளம் 40 சதவிகிதம் தமிழ் படமாக மலையாளத்தில் இருக்கும். தமிழ் மொழியில் மாறி வரும். அதிரடியாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது விளையாட்டு தளமாக இருந்தால் ஆர்வமாக இருக்கும் என்று விளையாட்டை மையப்படுத்தி இயக்கியிருக்கிறேன்.கச்சிசேரா ஆல்பத்தை பார்த்து தான் சாய்யை முடிவு செய்தேன். இன்று வரை என்னுடன் இருந்து பக்கபலமாக சாய் இருக்கிறார். ஷேன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.

சாந்தனு அண்ணனிடம் கதை கூறினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. அவருடன் 25 நாள் தான் படப்பிடிப்பு எடுத்தோம். ஆனால், அவருடன் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்து சென்றாலும் படத்திற்காக நன்றாக உழைத்திருக்கிறோம்.ப்ரீதியிடம் அயோத்தி படம் போன்று இப்படத்தில் அழுது கொண்டே இருக்க வேண்டாம், வசனங்கள் பேச வேண்டும் என்றேன். எனக்கு மலையாளம் தெரியாது என்றார். இங்கு பலருக்கு மலையாளம் தெரியாது என்று கூறினேன். வசனங்களை இடையில் மாற்றினாலும் பயிற்சி எடுத்து சிறப்பாக பணியாற்றினார்.

என்னுடைய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் என்னை 6வது புதிய இயக்குனராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். எனக்கு ஏதாவது கற்பனையாக வந்தால் நான் அவரிடம் தான் ஆலோசிப்பேன்.

பல்டியில் பல புதிய ஆக்ஷன் ட்ரிக் காட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறோம். அதிலும் கபடியில் அதை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்து செய்தோம். அல்போன்ஸ் அண்ணாவும் இப்படத்தில் இருக்கிறார். பல தமிழ் கலைஞர்கள் இப்படத்தில் இருப்பதால் டப்பிங்கிற்கு தனிகவனம் செலுத்தியிருக்கிறோம். இப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.

நடிகை ப்ரீதி பேசும்போது,
என்னுடைய முதல் படம் அயோத்தி-யில் இருந்தே உங்களுடைய ஆதரவு எனக்கு கிடைத்திருக்கிறது. இன்று என்னுடைய கிஸ் படம் வெளியாகியிருக்கிறது. மலையாளத்தில் எனக்கு இது முதல் படம். ஆனால், தமிழ் படமும் சென்னையும் என்னுடைய தாய் வீடு போன்ற உணர்வு வரும். தயாரிப்பாளர் இறுக்கமாக இல்லாமல் அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். உன்னி சேட்டா இயக்குனர் என்பதை விட இப்படத்தின் மூலம் அண்ணனாகிவிட்டார். இதற்கு முன்பு நான் நடித்த படங்களைவிட இப்படம் மிகவும் புத்துணர்ச்சியோடும், வித்தியாசமாகவும் இருக்கும். செல்வராகவன் சார், பூர்ணிமா மேடம் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். முதல் படம் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும். அதுபோல, எனக்கு பல்டி படம் அமையும். அதேபோல், ஜாலக்காரி பாடல் எனக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி. எங்கு சென்றாலும் என்னை ஜாலக்காரி என்று தான் அழைக்கிறார்கள்.

பார்டரில் நடக்கும் கதை. ஆனால் அனைவரையும் கவரும் படமாக இருக்கும். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் சாந்தனு பேசும்போது,
ப்ளு ஸ்டார் சந்திப்பிற்கு பிறகு இப்போது தான் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். என்னுடைய முதல் படம் ஆரம்பித்து இன்றுவரை நீங்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். நடிகரோ, தொழில்நுட்ப கலைஞர்களோ எந்தளவிற்கு கடினமாக உழைக்கிறார்களோ அந்தளவிற்கு அவர்களுக்கு நீங்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறீர்கள்.

நான் சாந்தனு பாக்யராஜ் ஆகத்தான் அறிமுகமானேன். ஆனால், இன்று 15 வருடங்களுக்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் இணைந்திருக்கிறேன். உன்னியின் நண்பர் தேவ் என்னை இப்படத்திற்காக பரிந்துரை செய்திருக்கிறார். உடனே உன்னி மற்றும் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்து கதை கூறி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு பாவக்கதைகள், தங்கம் எனக்கு கிடைத்தது. திரையரங்கில் வெற்றியடைந்த படமாக ப்ளு ஸ்டார் அமைந்தது.

பல்டி 4 பசங்களை கொண்ட கதை. ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. இப்படம் மலையாளத்தில் ரீஎண்ட்ரியாக இருக்கும். மலையாளம் தெரியுமா என்று கேட்டதும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று தெரியும் என்று கூறினேன். பிறகு நான் நடித்துவிடுவேன் ஆனால், வசனங்கள் கொஞ்சம் சிரமம் என்று கூறினேன். 1 மாதம் ஆன்லைன் டீச்சர் வைத்து பயிற்சி கொடுத்தார்கள்.

கபடி குழுவில் ஒருவர் காணாமல் போய்விட்டால் என்ன நடக்கும் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறார்கள். 3 மாதங்கள் கபடி பயிற்சி எடுத்து நடித்தோம்.

செல்வராகவன் சாருக்கு ரசிகனாக இல்லாமல் யாரும் இருக்க முடியாது. அவரிடம் அவருடைய படங்கள் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. அல்போன்ஸ் சாரிடம் பிரேமம் பற்றி பேசினேன். ப்ரீதியை அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். அப்பா எப்போதும் மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்பார். ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன். திருவிழா காட்சியில் தோன்றும்போது வேறு மாதிரி இருப்பார். நாமும் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்.

சாய்க்கு முதல் மலையாளப் படம், சந்தோஷமாக இருக்கிறது. நம்மை நம்பி இங்கு வந்திருக்கிறார்கள். இப்படம் பிடித்திருந்தால் அனைவரும் ஆதரவு கொடுங்கள்.

மலையாளத்தில் நான் தான் டப்பிங் பேசினேன். 3 நாட்களில் பேசி முடித்தேன். ஆனால், 3 நாட்களில் முடித்துவிட்டோம் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால், மறுபடியும் கேரளாவிற்கு அழைத்து இந்த ஒரு காட்சிதான் என்று கூறி முழு வசனங்களையும் பேசவைத்தார் தமிழ் படத்தில் உதடு அசைவுகளுக்கு ஏற்ப டப்பிங் பேச வேண்டும். அது சிறிதும் மாறாத அளவிற்கு பாலா சார் பணியாற்றியிருக்கிறார்.

நடிகர் ஷேன் நிகம் பேசும்போது,
பல்டி ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா. 4 பசங்க, அவர்களுடைய கபடி குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை. பினு சேட்டா, சந்தோஷ் சேட்டாவிற்கு நன்றி. செல்வராகவன் சாருக்கு நான் மிகப் பெரிய ரசிகன் அவருடைய புதுப்பேட்டை படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.

சாந்தனு மாதிரி ஆர்வமுடன் நடிப்பவர்களை பார்ப்பது அரிது. சாய் நன்றாக இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. ப்ரீதிக்கு நன்றி மற்றும் இப்படக் குழு அனைவருக்கும் நன்றி.

இப்படம் பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள் என்றார்.

Previous Post

ஹைரபாத்தை சேர்ந்த முன்னணி இயக்குநர்கள் மற்றும் கதை சொல்லிகளை நேரில் சந்தித்த நெட்ஃபிலிக்ஸ் சீஃப் கண்டெண்ட் ஆபிசர் பெலா பஜாரியா!

Next Post

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!

Next Post

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!

Popular News

  • விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி!

    விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • பல்டி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சரீரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஸ்ரீகாந்த் ஒதேலா – “தி பாரடைஸ்” படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வருகிறார்!

September 27, 2025

‘டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!

September 27, 2025

இதுவரை கண்டிராத சினிமா அனுபவத்தை தர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!

September 27, 2025

இயக்குநராக களமிறங்கிய தியா சூர்யா !!

September 27, 2025

பல்டி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

September 27, 2025

STR 49: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிலம்பரசன் டி.ஆர் – வெற்றிமாறன் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகிறது!

September 27, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.