சரீரம் – விமர்சனம்
ஜி வி பி பிலிம் சார்பில் ஜீவி பெருமாள் சாமி தயாரித்து இயக்கி புது முகங்கள் தர்ஷன்-சார்மி நடிப்பில் இவர் இயக்கிய படம் சரீரம்.
பொதுவாக தமிழ் சினிமாவில் காதலுக்காக எதை எதையோ தியாகம் செய்யும் கதாநாயகன் கதாநாயகி கதையை கொண்ட படங்களை எவ்வளவோ பார்த்திருக்கிறோம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம் தான் இந்த சரீரம்.
ஒரு கல்லூரியில் படிக்கும் கதாநாயகன் தர்ஷன் அதே கல்லூரியில் படிக்கும் சார்மியுடன் ஒரு இணைபிரியா காதல் லவ் என்றால் அப்படி ஒரு லவ்.

காதல் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றும் காதலர்களை நிச்சயம் ஏமாற்று என்பது போல ஒரு கட்டத்தில் நாயகனும் நாயகியும் பிழைத்துக் கொள்கிறார்கள் விழித்துக் கொண்ட இருவரும் என்ன செய்வது என்று யோசிக்க கதாநாயகி ஒரு முடிவை சொல்கிறார் இதன்படி நாம வாழலாம் நம்மளை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார் அதன்படி கதாநாயகிகளும் கதாநாயகியும் ஒரு வித்தியாசமான முடிவு எடுத்து வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதே படத்தின் பல திருப்பங்களுக்கிடையே வரும் கதை.
அறிமுக நாயகன் தர்ஷன் மிக அழகாக நடித்திருக்கிறார் தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடம் உண்டு.
நாயகி சார்மி மிக அழகாக நடித்திருக்கிறார் பெற்றோரிடத்தில் தன் காதலை மறுத்து நடித்து வெளிப்படும் விதம் அருமை தன் கர்ப்பமானதை மறைத்து அவர் எடுக்கும் அதிர்ச்சி முடிவு படம் பார்க்கும் அனைவரையும் குறைய வைக்கின்றது.
கதாநாயகியின் தாய் மாமனாக வரும் மனோஜ் தனது நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் முரட்டு சுபாவத்தை குறைத்துக் கொண்டால் தமிழ் சினிமாவில் எதிர்காலம் உண்டு.இரட்டையர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையானதை கொண்டு வந்திருக்கிறது.
மொத்தத்தில் காதலுக்காக தியாகம் என்ற பெயரில் எதையெதையோ செய்து கொண்டிருக்கும் இந்த உலகில் இந்த நாயகன் நாயகி இருக்கும் வித்தியாசமான முடிவு அனைவரையும் இயங்க வைக்கும் யோசனை பண்ணவும் வைக்கும்.