இயக்குநராக களமிறங்கிய தியா சூர்யா !!
2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் “லீடிங் லைட்” #LeadingLight. சூர்யா ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி – டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் oscar Qualifying Run க்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது.
அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
படத்தின் விவரங்களுக்கு : https://www.regencymovies.com/ movie/leading-light-the- untold-stories-of-women- behind-the-scenes