• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ரைட் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
September 27, 2025
in விமர்சனம்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ரைட் – விமர்சனம் 

மீண்டும் கிரைம் இன்வெஸ்டிகேஷன் கதையில் நட்டி,அருண்பாண்டியன்  நடித்திருக்கும் படம் ரைட்.

போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் நட்டி, பிரதமர் பாதுகாப்பிற்காக சென்ற  நிலையில், அவரது காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர், எங்கோ இருந்து தொழில்நுட்ப ரீதியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார்.

தன் மகன் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண் பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் காவல் நிலையத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். பிரதமர் நிகழ்ச்சி நடக்கும் போது விசயம் கசிந்தால் பதற்றம் அடிகரிக்கும் என்பதால், வெளியே  தெரியாத வகையில், பிரச்சனையை சமாளிக்க காவல்துறை முயற்சிக்க, மர்ம நபர் தனது தேவையை தெரியப்படுத்துகிறார். அது என்ன ?, அவர் யார் ? என்பதை காவல்துறை கண்டுபிடித்து, காவல் நிலையத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்டதா? இல்லையா ? என்பதே ‘ரைட்’ கதை.கதையின் நாயகன் என்ற அடையாளம் இருந்தாலும், ஒரு கதாபாத்திரமாக கதைக்கு ஏற்ப நட்டி நடித்திருக்கிறார். படம் முழுவதும் அவர் இடம்பெறவில்லை என்றாலும், படத்தின் இறுதிக்காட்சியின் போது திடீரென்று எண்ட்ரி கொடுத்து, அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து தன்னை கதையின் நாயகனாக நிலைநிறுத்திக் கொள்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் பாண்டியன், மகன் காணவில்லை என்ற பரிதவிப்பையும், அவருக்கு என்ன ஆனது என்ற கவலையையும் தன் நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகன் பற்றிய புகாரை சரியாக விசாரிக்காத காவலர்கள் மீது கோபம் கொள்வதும், வெடிகுண்டு வைக்கப்பட்ட காவல் நிலையத்தில் சிக்கிக்கொள்வதும், திடீரென்று அவர் மீது எழும் சந்தேகம் என்று திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

பெண் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் அக்‌ஷரா ரெட்டி, சூழ்நிலையை புரிந்துக்கொண்டு செயல்படுவது, பிரச்சனையை சமாளிக்க முயற்சிப்பது என்று அசல் காவல்துறை அதிகாரி போல் அதிரடியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் மூணார் ரவி, எதார்த்தமான நடிப்பின் மூலம் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை சர்வசாதாரணமாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக வெடிகுண்டுக்கு அடியில் உட்கார்ந்து படத்தின் இறுதி வரை உட்கார்ந்தபடியே தன்னுள் இருக்கும் பீதியையும், பதற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.

நீதிபதியாக நடித்திருக்கும் வினோதினி, இளம் ஜோடியாக நடித்திருக்கும் ஆதித்யா சிவகுமார் மற்றும் யுவினா, கைதியாக நடித்திருக்கும் தங்கதுரை, பெண் காவலராக நடித்திருக்கும் நடிகை என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியனின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் பதற்றம், கதாபாத்திரங்களிடம் இருக்கும் பயம், திரைக்கதையின் வேகம் ஆகியவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மிக கச்சிதமாக பயணித்திருக்கிறது.முழுக்க முழுக்க காவல் நிலையத்தில் நடக்கும் கதை என்பதால், காவல் நிலையத்தை தனது வசதிக்கு ஏற்ப வடிவமைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ், ஒரே இடத்தில் கேமரா பயணிக்கும் உணர்வே ஏற்படாத வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் மற்றும் கலை இயக்குநர் தாமு ஆகியோரது பணி படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் சுப்பிரமணியன் ரமேஷ்குமார், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம் மற்றும் பழிவாங்கும் கதையை புதிய வடிவில் கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். குறிப்பாக காவல் நிலையத்தில் நடக்கும் கதையை எந்தவித தொய்வும் இன்றி விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் நட்டி, படத்தின் ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் எண்ட்ரி கொடுத்த சில நிமிடங்களிலேயே எக்ஸிட் ஆகிவிட, அதன் பிறகு தொடங்கும் கதைக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் போதே, அவருக்கும் காவல் நிலையத்தில் நடக்கும் மர்ம சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது, என்று யூகித்து விட முடிகிறது. இருந்தாலும், அந்த யூகங்களை மறந்து படத்துடன் பார்வையாளர்கள் பயணிக்கும் வகையில், சில கதாபாத்திரங்கள் மற்றும் திருப்பங்களை புத்திசாலித்தனமாக கையாண்டு  படத்தை ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார்.
கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதது.
புதுமுக இயக்குனர் முதல் படத்திலிருந்து இயக்கத்தில் முத்திரை பதித்திருக்கிறார்.
மொத்தத்தில் 2 மணி நேரம் சூடான கிரைம் திரில்லர்.
நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம்.
Previous Post

அந்த 7 நாட்கள் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும்“சரஸ்வதி”

Next Post

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும்“சரஸ்வதி”

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.