• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மகத்தான மகாராணியின் புதிய அத்தியாயம் துவங்கியது ! நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!

by Tamil2daynews
November 19, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மகத்தான  மகாராணியின் புதிய அத்தியாயம் துவங்கியது ! நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை  நயன்தாரா இணைந்துள்ளார் !!

 

அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட  வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில்  மீண்டும் ஒரு புதிய படமான,  #NBK111 வரலாற்றுச் பின்னணியில் மாபெரும் படைப்பாக  உருவாகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

இப்போது படம் ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — மகத்தான, வலிமையான ராணியின் அத்தியாயம் துவங்கியுள்ளது.
அழகும், கம்பீரமும் கலந்த நயன்தாரா, இந்த மாபெரும் வரலாற்றுப் படத்தில் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக, கதாநாயகியாக இணைந்துள்ளார். படத்தின் கதையில் முக்கியத்துவமிக்க, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ஸ்ரீ ராம ராஜ்யம் ஆகிய மூன்று படங்களுக்கு பிறகு, பாலகிருஷ்ணா–நயன்தாரா ஜோடி  நான்காவது முறையாக இணைவதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த அறிவிப்பு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.

அறிவிப்பு வீடியோவே பிரமிப்பை தருவதாக கண்களை கவரும் காட்சி அமைப்புடன்,படத்தின் பெருமையை உணர்த்துகிறது.
Imageஇப்பபடம் பற்றிய மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில்,  குதிரையில் வரலாற்று ராணியாக நயன்தாராவை அறிமுகப்படுத்தி, இயக்குநர் கோபிச்சந்து மலினேனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

முதல் முறையாக வரலாற்று படத்தில் களம் இறங்கும் இயக்குநர் கோபிசந்த் மலினேனி, தன் மாஸ் ஸ்டைலை இந்த பிரம்மாண்ட படைப்பிலும் வழங்கவுள்ளார். பெரும்பாலும் கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர்கள் வழங்கும் இவர், இம்முறை பாலகிருஷ்ணாவை இதுவரை காணாத புதிய கதாப்பாத்திரத்தில் வடிவமைக்கிறார். வரலாற்று பின்னணியில் எமோசனும் ஆக்சனும் கலந்த மிகப்பெரும் அனுபவத்தை, பிரம்மாண்ட காட்சிகளுடன் வழங்கப் போகிறது இந்த படம்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

நடிகர்கள்:
நந்தமூரி பாலகிருஷ்ணா
நயன்தாரா

தொழில்நுட்ப கலைஞர்கள்:
எழுத்து, இயக்கம்: கோபிசந்த் மலினேனி
தயாரிப்பு: வெங்கட சதீஷ் கிலாரு
வழங்குபவர்: விருத்தி சினிமாஸ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Previous Post

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

Next Post

இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து ‘கொம்புசீவி’ படத்திற்காக பாடியுள்ளனர்

Next Post

இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து 'கொம்புசீவி' படத்திற்காக பாடியுள்ளனர்

Popular News

  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.டி.நாயுடு(GDN) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.