• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

இரவின் விழிகள் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
November 20, 2025
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இரவின் விழிகள் – விமர்சனம் 

கதையின் நாயகனாக நடித்து மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரா தயாரிக்கும் படம், ‘இரவின் விழிகள்’

. சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். நாயகியாக நீமா ரே நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் வெளியான ‘பிங்காரா’ என்ற படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். மேலும் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர் என பலர் நடித்துள்ளனர்.

ஏ.எம் அசார் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வலைதளங்களை மையமாக வைத்து சைக்கோ த்ரில்லர் ஜானரில் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்குத் தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

கதையின் நாயகனாக கர்ணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹேந்திரன், அறிமுக நடிகர் என்றாலும் அதற்கான அடையாளங்கள் தெரியாதபடி இயல்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் நீமா ரேய் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டி பார்வையாளர்களை குஷிப்படுத்துகிறார்

கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தனது நடிப்பில் எஸ்.ஜே.சூர்யாவை ஞாபகப்படுத்தினாலும், திரைக்கதைக்கு அவரது நடிப்பு பெரும் பலம் சேர்த்திருக்கிறது

நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகியோர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணப்பட்டிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். “கருப்பு…” பாடல் வீரியம் மிக்கதாகவும், அஸ்மிதா ஆடும் குத்துப்பாடல் குஷிப்படுத்தும் விதமாகவும் உள்ளது. பின்னணி இசையிலும் குறையில்லை.

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் காட்சிகளை பளிச்சென்று படமாகி படத்தின் தரத்தை அதிகரிக்க செய்திருக்கிறார். இரவு நேர காட்சிகளில் சில யுத்திகளை பயன்படுத்தியிருப்பது தெரிந்தாலும், அதையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ஆர்.ராமர், காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து விறுவிறுப்பாகவும், வேகமாகவும் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தற்போதைய சோசியல் மீடியா மோகத்தில் மூழ்கியிருப்பவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிப்பதோடு, அவர்களுக்கு அதிரடியான முறையில் அறிவுரை கூற முயற்சித்திருக்கிறார்.

சோசியல் மீடியா பிரபலங்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது, அந்த பட்டியலில் நாயகன், நாயகி சிக்கிக் கொண்டு தப்பிக்க முயற்சிப்பது என்று திரைக்கதை பரபரப்பாக பயணித்தாலும், கிளைமாக்ஸில் அண்ணன் – தங்கை பாசம் மூலம் செண்டிமெண்ட் காட்சிகளால் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பார்வையாளர்களை கலங்க வைத்து விடுகிறார்.

சிறு பட்ஜெட்டில் படம் எடுத்திருப்பதால் ஒரு சில காட்சிகளை நிறைவாக சொல்ல முடியவில்லை என்பது திரையில் தெரிகிறது.

நிச்சயம் இந்த இரவின் விழிகள் வெளிச்சத்தை காட்டும்.
Previous Post

தனுஷ் உடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ள க்ரிதி சனோன்!

Next Post

மிடில்கிளாஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

மிடில்கிளாஸ் - விமர்சனம் ரேட்டிங் - 3.5 / 5

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.