• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!

by Tamil2daynews
November 29, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்” படத்தின்  படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!  

யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும்  ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது.

ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான், இப்படத்தின் மையம்.  வாழ்வின் வினோதங்களையும் அன்பையும் பேசும் படைப்பாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் அம்சங்களுடன், ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய  இயக்குநர் கே. பி. ஜெகன், இப்படத்தை எழுதி இயக்குவதுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன்  அருள்தாஸ்,  கதிரவன் பாலு, அம்மு சாய், மோனிகா சந்தோஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.  குழந்தை நட்சத்திரங்களாக பேபி தனுஷ்கா, இயக்குநர் கே பி ஜெகனின் மகன் மாஸ்டர் சபரிஷ், ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின்  பெரும்பாலான காட்சிகள் , திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. சென்னை ஏ ஆர் எஸ் கார்டனில் கிளை சிறைச்சாலை செட் அமைத்து, படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் மணலிபுதூர், சென்னை மேற்கு மாம்பலம், திருவேற்காடு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.மாயாண்டி குடும்பத்தார் என்ற காலத்தால் அழியாத சிறந்த படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கவுள்ளது.  படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் – யுனைடெட் ஆர்ட்ஸ்
தயாரிப்பு – எஸ். கே. செல்வகுமார் B. E.,
எழுத்து & இயக்கம் – கே. பி. ஜெகன்
ஒளிப்பதிவு (DOP) – சுகசெல்வம்
இசையமைப்பாளர் – ஸ்ரீகாந்த் தேவா
படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார்
கலை இயக்கம் – வீரசமர்.
பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா,
திரை வண்ணன், சக்தி (USA)
நடன அமைப்பாளர் – ரிஷி
உடை வடிவமைப்பாளர் – கே. நடராஜ்
தயாரிப்பு நிர்வாகி – பாஸ்கர்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – ராமதாஸ்
நிர்வாக தயாரிப்பாளர் – சாமுவேல் சிவராஜ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Previous Post

ரிவாள்வர் ரீட்டா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

தேரே இஷ்க் மே – விமர்சனம்

Next Post

தேரே இஷ்க் மே - விமர்சனம்

Popular News

  • ‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0
  • மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !!

November 30, 2025

‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

November 30, 2025

பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

November 30, 2025

‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

November 30, 2025

IPL – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 30, 2025

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

November 29, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.