Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா”
ரிவால்வர் ரீட்டா’ ஒரு நாயகி மையப்படுத்தப்பட்ட டார்க் காமெடி திரைப்படம். ஒரு பிணத்தை மறைக்கப் போராடும் ஒரு குடும்பத்தின் கதையை, விறுவிறுப்புடன் சொல்ல முயற்சித்துள்ளனர். கீர்த்தி சுரேஷின் உறுதியான நடிப்பு மற்றும் ராதிகா சரத்குமாரின் கலகலப்பான நகைச்சுவை இரண்டும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.

பாண்டிச்சேரியில் வாழும் ரீட்டாவின் (கீர்த்தி சுரேஷ்) வீட்டில், எதிர்பாராத விதமாக ஏரியா ரவுடி டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்புராயன்) இறந்துவிடுகிறார். தனது அப்பாவின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் டிராகுலாவின் மகனிடமிருந்து, தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க, ரீட்டா துப்பாக்கியை (ரிவால்வர்) கையில் எடுக்கிறார். இந்தச் சவாலான சூழ்நிலையை ரீட்டா எப்படி சமாளிக்கிறார் என்பதை டார்க் காமெடி பாணியில் ஜாலியாகச் சொல்லியிருக்கும் படமே ‘ரிவால்வர் ரீட்டா’
கீர்த்தி சுரேஷ் வழக்கம் போல், ஒட்டுமொத்தப் படத்தையும் தனது தோளில் சுமந்து, ஆக்ஷன் மற்றும் காமெடி இரண்டிலும் கச்சிதமாக நடித்து ‘ரீட்டா மீட்டர்’க்கு நியாயம் செய்திருக்கிறார்.

மற்றவர்கள் ரெடின் கிங்ஸ்லியின் சில காமெடிகள் மட்டுமே சிரிக்க வைக்கின்றன. சென்ராயனின் “ஆத்தா குமார்” கதாபாத்திரம் சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்தினாலும், சூப்பர் சுப்புராயன், ஜான் விஜய், அஜய் கோஷ், சுனில் போன்ற மற்ற நடிகர்கள் சிறந்த பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.

கதைக்களம் மிகவும் வழக்கமானது. பிணத்தை மறைக்கும் போராட்டக் கதைகளை ஏற்கெனவே பலமுறை பார்த்துவிட்டோம். திரைக்கதை மற்றும் கதை முடிவில் எதிர்பார்ப்புக்குரிய திருப்பங்கள் இல்லை. சில இடங்களில் ரெடின் கிங்ஸ்லி, சென்ராயன் காமெடி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. “கோலமாவு கோகிலா”வின் தாக்கம் இல்லை என்பது ஒரு எதிர்பார்ப்பைக் குறைக்கிறது.
மொத்தத்தில் கோலமாவு கோகிலா என்கிற படத்தை ஞாபகம் படுத்தினாலும் இன்றைய சூழலில் இப்படம் ரசிக்க வைக்கிறது.









