• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நாங்களும் ஹீரோ தான் ஹீரோ அவதாரம் எடுக்கும் ரவி மரியா

by Tamil2daynews
December 31, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நாங்களும் ஹீரோ தான் ஹீரோ அவதாரம் எடுக்கும் ரவி மரியா
ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும்  திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களான ராதா ரவி – ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழக சட்ட பேரவை தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார்கள்? என்ற எதிர்பார்ப்பை விட.. இந்த கூட்டணியின் அரசியல் காமெடி தர்பார் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என படக் குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து,இயக்கிய இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, , கஞ்சா கருப்பு,இயக்குநர் பேரரசு ,நிழல்கள் ரவி , பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு துர்காஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  கலை இயக்கத்தை குணசேகரன் கவனிக்கிறார். அரசியலும் , நகைச்சுவையும் கலந்து தயாராகும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் – இயக்குனர் ராம்தேவ் தயாரிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை கண்ணகி மைந்தன் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” தற்போது தமிழக அரசியல் களம் அடுத்த ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற கருத்துக்கணிப்புகளால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் ராதா ரவி மற்றும் ரவி மரியா ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக இணைந்து திரையில் தோன்றி அரசியல் காமெடி தர்பார் நடத்துகிறார்கள். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அத்துடன் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மையப்படுத்தியும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது ” என்றார். மேலும் கூறுகையில் ரவி மரியாவுக்கு கதாநாயகி தேடுதல் படலம் இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல உலக அளவில் கதாநாயகி தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார்

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது.

இதனிடையே இயக்குநரும், நடிகருமான ராம் தேவ் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி, பத்து கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதும், இவரது இயக்கத்தில் வெளியான ‘பழகிய நாட்கள்’ மற்றும் மூன்றாம் மனிதன் திரைப்படத்தில் இடம் பிடித்த வசனங்களை சமூக வலைதளத்தில் ரீல்ஸ்களாக வெளியிடப்பட்டு, பல மில்லியன் பார்வைகளை குவித்து சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post

கவின் – ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!

Next Post

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Next Post

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.