கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ரூட் ‘ROOT – Running Out of Time’ முதல் பார்வையை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த தருணம் படக்குழுவினருக்கு மறக்க முடியாத, பெருமைமிக்க நினைவாக அமைந்தது.
அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் S சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் துணை இயக்குநராக . தற்போது ‘ROOT – Running Out of Time’ படத்தின் மூலம் தனது முதல் படத்தை இயக்கியிருக்கிறார்.
‘ROOT – Running Out of Time’ படத்தை சூரியபிரதாப் S எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன், தமிழில் அறிமுகமாகும் அபார்ஷக்தி குரானா, பாவ்யா திரிகா, Y. Gee. மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிவியல் , கிரைம் த்ரில்லர் உடன் , ஆழமான உணர்வுகளையும் இணைத்து, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், தற்போது போஸ்ட் ப்ரோடக்க்ஷன் பணிகளில் இருக்கிறது.








